சமூக வலைதளத்தில் பிரபலமாக செயல்பட்டு வருகின்றவரும், திமுக ஐடி பிரிவு செயலாளர் PTR தியாகராஜன் தீவிர ஆதரவாளருமான சவுக்கு சங்கர், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருவது பின்னணியில் PTR தியாகராஜன் இருக்கின்றாரா என்கிற சந்தேகம் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது, பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு காட்சிகளையும் அநாகரிமான வார்த்தைகளால் மிக கொச்சையாக விமர்சனம் செய்து வருகின்றவர் சவுக்கு சங்கர்.
தன்னை நடுநிலை பத்திரிகையாளர் என்று காட்டி கொண்டு, பாஜக மற்றும் திமுகவை மட்டும் அநாகரிகமாக விமர்சனம் செய்து வரும் சவுக்கு சங்கர், பல முறை தனக்கு திமுகவில் பிடித்த அரசியல்வாதி PTR தியாகராஜன் என குறிப்பிட்டுள்ளார், PTR தியாகராஜன் தான் ஒரு பாரம்பரிய மிக்க குடும்பத்தில் இருந்து வந்திருப்பதாக கூறிக்கொண்டாலும், சவுக்கு சங்கரின் அநாகரிகமான கருத்துக்கு ஆதரவு தரும் விதத்தில், அவருடைய பதிவுகளுக்கு லைக் போட்டு உற்சாக படுத்தியும் வந்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் பல பட்ட படிப்பு படித்த தன்னை திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்காமல், பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோரை நியமித்தது தியாகராஜனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறபடுகிறது, இந்நிலையில் சமீப காலமாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகிய இருவரையும் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சனம் செய்து வருவது பின்னனியில் PTR தியாகராஜன் இருக்க கூடும் என திமுகவினர் சந்தேகிப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக உதயநிதியை ஒருமையில் மிக கொச்சையாக சவுக்கு சங்கர் விமர்சனம் செய்வது பின்னனியில், திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதில், முக்கிய பங்காற்றியவர் உதயநிதி என்பது தான் காரணம் என கூறபடுகிறது, தற்போது நிவர் புயலின் போது திமுக தலைவர் ஸ்டாலினை சவுக்கு சங்கர் விமர்சனம் செய்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.