இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு கொடுங்க.! PTR தியாகராஜனுக்கு எதிராக மதுரை மத்திய தொகுதி இஸ்லாமியர்கள் போர் கொடி.!

0
Follow on Google News

மதுரை மத்திய தொகுதியில் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் இடத்தில இஸ்லாமிய மக்களின் வாக்கு வங்கி இருப்பதால், திமுக சார்பில் இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்த வேண்டும் அல்லது, கூட்டணி கட்சியான முஸ்லீம் லீக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதியை ஒதுக்க வேண்டும் என அந்த தொகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் திமுகவுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளது மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் PTR தியாகராஜன் திமுக சார்பில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் மிக சிறிய தொகுதியாக இருக்க கூடிய மதுரை மத்திய தொகுதியில் சுமார் 2.30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர், அதில் இஸ்லாமியர் வாக்குகள் 30 ஆயிரத்துக்கு மேல் உள்ளது, மதுரை மத்திய தொகுதியில் உள்ள மாபாளையம், தெற்கு வாசல் பகுதியில் உள்ள காஜிமார் தெரு போன்ற பகுதிகள் பெரும்பாலும் முஸ்லீம்கள் வாசிக்க கூடிய பகுதி, சராசரியாக 65 முதல் 75 சதவீத வாக்குகள் தேர்தலின் போது பதிவாகும் என்று கணக்கிட பட்டுள்ளது.

அதில் முஸ்லீம் வாக்குகள் முழுமையாக 90 சதவிகிதத்திற்கு மேல் பதிவாகும் என்றும், பிற மதத்தினர் வாக்குகள் 50 முதல் 60 சதவிகிதம் பதிவாகும் என மதுரை மத்திய தொகுதி அரசியல் பிரபலங்கள் கடந்த தேர்தலின் போது வாக்கு பதிவுகளை சுட்டி காட்டுகின்றனர். இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை அந்த தொகுதிக்குட்பட்ட காஜிமார் தெரு, மற்றும் மாபாளையம் ஆகிய இரு ஜமாத்கள் முடிவு செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில் இதற்கு முன் மதுரை மத்திய தொகுதியில், 2001 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த M.A.ஹக்கீம் வெற்றி பெற்றுள்ளார் அதன் பின் 2006 ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் ஹவுஸ் பாட்ஷா வெற்றி பெற்றுள்ளார், மத்திய தொகுதி வரலாற்றில் இந்த இரண்டு முஸ்லீம்கள் மட்டும் தான் மத்திய தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு காட்சிகளில் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என ஜமாத் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தொடர்ந்து திமுக நம் மீது சவாரி செய்து ஏமாற்றி வருவதை இனியும் அனுமதிக்க கூடாது, முஸ்லீம்கள் மீது உண்மையிலே அக்கறை இருந்தால் மதுரை மத்திய தொகுதியில் முஸ்லீம் வேட்பாளருக்கு திமுக வாய்ப்பு வழங்க வேண்டும் என மதுரை மத்திய தொகுதி முஸ்லிம்கள் தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் PTR தியாகராஜனுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,

இதனை தொடர்ந்து மதுரை மத்திய தொகுதியில் 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஹவுஸ் பாட்ஷாவுக்கு முக அழகிரியின் தயவால் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது, இதன் காரணமாகவே மதுரை மத்திய தொகுதி முஸ்லிம்களுக்கு முக அழகிரி மீது ஒரு மரியாதை இருந்து வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் மதுரை மத்திய தொகுதி முஸ்லீம்கள் PTR தியாகராஜனுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளது மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டால் PTR தியாகராஜன் வெற்றி பெற வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது.