இன்னும் ஐந்தே மாதம் தான்.! ஸ்பெஷல் டிஜிபி யை மிரட்டும் உதயநிதி.! ஆட்சியில் இல்லாத போதே இப்படியா.?

0
Follow on Google News

ஸ்பெஷல் டிஜிபியை பகிரங்கமாக திமுக இளைஞரணி செயலாளர் மிரட்டிய சம்பவம் ஆட்சியில் இல்லாத போதே இப்படியா என மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சியில் நில அகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, கவல்த்துறையை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து நிறுத்துவது என திமுகவின் உச்சகட்ட அராஜக செயலின் காரணமாக 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்து எதிர்கட்சி என்கிற வரிசையில் கூட அமர முடியாத சூழல் திமுகவுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் 2011ம் ஆண்டு மீண்டும் முதல்வராக வந்த ஜெயலலிதாவின் அதிரடியால் திமுகவின் அராஜக செயலுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது. மேலும் நிலஅபகரிப்பில் ஈடுபட்ட திமுக முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன, அதன் பின் நடத்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தோல்வி அடைந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை இழந்த திமுக சுமார் பத்து வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில் 2006-2011 திமுக ஆட்சியில் நடத்த அராஜகத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதால் தான் தொடர்ந்து திமுக ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளதை சற்றும் எண்ணி பார்க்காமல், ஸ்பெஷல் டிஜிபியை உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக மிரட்டியுள்ள சம்பவம் திமுக இன்னும் திருந்தவில்லை என்பதை காட்டுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என தமிழக முழுவதும் சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் முளுவதும் கொரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில் மக்களை பெருமளவில் கூட்டுவது போன்று உதயநிதியின் இந்த பயணம் மேலும் தமிழக்தில் கொரோனா தொற்றை ஏற்படுத்துவதால் தமிழக அரசு உதயநிதியின் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளது, ஆனால் உதயநிதி தொடர்ந்து தான் திட்டமிட்டபடி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் மக்களை கூட்டும் முயற்சியில் தொடர்ந்து செய்து வருகிறார்,

இதனை தொடர்ந்து உதயநிதியை சில இடங்களில் தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றது காவல் துறை, இது குறித்து உதயநிதி ஒரு மேடையில் பேசுகையில், என்னை கைது செய்ய தூண்டிவிடுவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும், ஆனால் அதை செய்து வருவது ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ்தாஸ், பெயரை நாங்கள் நியாபகம் வைத்திருப்போம், இன்னும் ஐந்து மாதங்கள் தான் உள்ளது, எங்களுக்கு தெரியாத காவல் துறையா.? நாங்கள் பார்க்காத காவல் துறையா என ஸ்பெஷல் டிஜிபியை உதயநிதி மிரட்டியுள்ள சம்பவம் தமிழக மத்தியில் திமுக மீது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.