பாஜக துணை தலைவர் அண்ணாமலை IPS சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றி பேசுகையில் தமிழ் மன்னன் ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் பெருமை மிக்க வரலாற்றை பேசினார் அதில்,சோழ மன்னன் உலகில் பல நாடுகளில் ஆட்சி புரிந்தார், இந்தோனேஷியா, ஜாவா, மலேசியா போன்ற நாடுகளுக்கு அவர் கப்பல் வழியாக பயணம் செய்யும் பொது, ஆமை கழுத்தில் கயிறு கட்டி அந்த ஆமை வழி காட்ட பின் தொடர்ந்து கப்பலில் மன்னர்கள் பயணிப்பார்கள் என்ற வரலாற்று குறிப்பை எடுத்து பேசினார் அண்ணாமலை IPS.
இதற்கு வழக்கம் போல் யாரிடமாவது வம்பிழுத்து தொடர்ந்து அவமானப்பட்டு வரும் திமுக எம்பி செந்தில் குமார் இது என்ன ஆமைக்கு வந்த சோதனை என நக்கலாக தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார், இதற்கு வலைதளவாசிகள் திமுக எம்பி செந்தில்குமார் உண்மையிலே டாக்டர் தானா.? அல்லது போலி டாக்டரா என சோதனை செய்ய வேண்டும் என பதிலளித்தவர்கள் மேலும், அந்த காலத்தில் GPS பயன்படுத்தியா கடலில் பயணம் செய்திருக்க முடியும் என தொல்லிய துறை வெளியிட்ட சில ஆதாரங்களை வெளியிட்டு.
இது தமிழில் உள்ளது, உங்களுக்கு தமிழ் படிக்க தெரியாது, பக்கத்தில யாரிடமாவது கேட்டு அண்ணாமலை IPS தெரிவித்த தகவல் உண்மை என்பதை புரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.மேலும் திமுக எம்பி செந்தில்குமாருக்கு பதிலளித்துள்ள அண்ணாமலை IPS, உங்கள் கட்சி மற்றும் உங்கள் கூட்டணிக்குள் பல ஆமைகள் உங்களிடம் உள்ளது, அவைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார், இதற்கு முன் அண்ணாமலை IPS அவர்களிடம் நேரடி சவாலுக்கு அழைப்பு விடுத்து பின் திமுக எம்பி செந்தில்குமார் பல்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.