வெற்றிவேல் யாத்திரையில், அமித்ஷா, யோகி, ராஜ்நாத் சிங்..! தமிழக்தில் உச்சகட்ட பாதுகாப்பு.!

0
Follow on Google News

தமிழக முழுவதும் வெற்றிவேல் யாத்திரை நடத்த தமிழக பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, 1990 கால கட்டத்தில் இந்தியா முழுவதும் அத்வானி நடத்திய ரத யாத்திரை மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க வழிவகை செய்தது, அதே போன்று தமிழக முழுவதும் நடக்க இருக்கும் வெற்றி வேல் யாத்திரை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக பாஜகவின் அரசியல் தமிழக இந்துக்கள் மத்தியில் மிக பெரிய எழுச்சியை உருவாக்கியுள்ள நிலையில், தற்போது நடக்க இருக்கும் வெற்றிவேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, திமுக கூட்டணி கட்சிகள் பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் பலத்த பாதுகாப்புடன் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தமிழக பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு மேலும் வலுசேர்க்கும் விதத்தில், மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த வேல் யாத்திரையில் பங்கு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை ஒரு மாதம் காலம் நடக்கும் வேல் யாத்திரையில்.

திருத்தணியில் தொடங்கும் ரத யாத்திரை அறுபடை முருகனின் ஒவொரு படை வீடுகள் வழியாக தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது, இந்நிலையில் பழனியில் நடைபெறும் வேல் யாத்திரையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் வேல் யாத்திரையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், திருசெந்தூரின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கு பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.