பீகார் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் இந்த வேளையில், நிமிடத்துக்கு நிமிடம் திருப்பம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களையும் தாண்டி பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களில் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களில் முன்னனியில் உள்ளது, இது குறித்து பிரபல அரசியல் விமர்சகர் பானுகோம்ஸ் கூறுகையில்.
பிஹார் தேர்தலில், பெரும்பாலோரின் கவனம் முழுவதும் பெரிய கட்சிகளின் வெற்றி தோல்விகளில் குவிந்திருக்க. நான் கவனிப்பது & கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயமாக நினைப்பது 10 இடங்களில் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கும் CPI (ML) என்கிற தேர்தல் நிலவரம், பிஹாரில் நாசம் விளைவித்துக் கொண்டிருந்த நக்சலிசம், ஜனநாயகப்பாதைக்கு திரும்பி, தேர்தல் அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு நேரான வழிக்கு திரும்பிவிட்டனர் என்றெல்லாம் விளக்கங்கள் கொடுத்தாலும்.
அடிப்படையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்-ன் அதிதீவிர புரட்சிப் பார்வையில் /அதிதீவிர சித்தாந்தப் பார்வையில் மாற்றமில்லை என்பதே உண்மை, 2010-ல் ஒரு இடத்தில வென்றவர்கள்…2015-ல் 3 இடங்களில் வென்றனர். இப்போது 2020-ல் 10 இடங்களில் முன்னிலை ! 10 இடங்களிலும் வெற்றியடைவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆனால், கவனிக்க வேண்டியதும், கவலையளிப்பதும், அதிதீவிர நக்சல் சிந்தாத்தில் இருந்து, ‘சித்தாந்த பார்வையில் மாற்றம் எதுவும் இன்றி’, அரசியல் கட்சி உருவத்தில், தேர்தல் அரசியலில் CPI ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) அடைந்திருக்கும் வளர்ச்சி இது என பானுகோம்ஸ் தெரிவித்துள்ளார்.