கிறிஸ்துவ ஓட்டுக்காக விபூதி இல்லாமல் காட்சியளித்த எடப்பாடியர்.! வெடித்தது பெரும் சர்ச்சை.!

0
Follow on Google News

எப்போது நெற்றியில் விபூதியுடன் காட்சியளிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விபூதி இல்லாமல் காட்சி தந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, திமுக தலைவர்கள் சிறுபான்மை ஓட்டுக்காக பெரும்பான்மை இந்துக்கள் மனம் புண்படும்படி பேசுவது, இந்துக்களில் அடையாளமாக இருக்கும் விபூதி, குங்குமம் வைத்து கொள்வதை தவிர்ப்பது ஆனால் சிறுபான்மையினர் மத நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது வழக்கம்.

ஆனால் அதிமுக திராவிட கட்சி என்றாலும், அக்கட்சியின் பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா அணைத்து மத மக்களையும் சமமாக பார்த்தவர், ஏகாரணத்துக்காகவும் தனது மத நம்பிக்கையை அவர் யாருக்காகவும் மறைத்தது கிடையாது, சிறுபான்மை மத நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜெயலலிதா தனது நெற்றியில் இருக்கும் குங்குமத்துடன் தான் பங்குபெறுவர், இது அனைத்து சமூக மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு மரியாதையை பெற்றுத்தந்தது.

ஆனால் தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொண்டு பேசுகையில் அவர் நெற்றியில் எப்போதும் இருக்கும் விபூதியை காணவில்லை, இதன் பின்னணி குறித்து விசாரித்ததில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக கிறிஸ்துவ வாக்காளர்கள் இருப்பதால் அம்மக்களின் வாக்கு அரசியலுக்காக தனது மத நம்பிக்கையை மறைக்கும் விதத்தில் நெற்றியில் விபூதி இல்லாமல் எடப்பாடி பழனிசாமி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது, சிறுபான்மை வாக்கு வங்கிக்காக எடப்பாடி பழனிசாமி இது போன்று செயல்படுவது திமுகவை பின்பற்றி அரசியல் செய்ய தொடங்கிவிட்டாரா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது, மேலும் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து கூறுகையில், வாக்கு அரசியலுக்காக எடப்பாடி பழனிசாமி எங்களிடம் நடிக்க வேண்டாம் அவர் எதார்த்தமாக எங்களிடம் காட்சியளித்தாலே நாங்கள் ஏற்று கொள்வோம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.