மதுரையில் பாஜகவின் அசூர வளர்ச்சி.! எதிர்கொள்ள முடியாமல் பொய் செய்தியை பரப்பி வருகிறாரா திமுக எம்எல்ஏ மூர்த்தி.?

0
Follow on Google News

மதுரை புறநகர் மாவட்ட பாஜகவின் அசூர வளர்ச்சியை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் திமுக ஆதரவு ஊடகங்களை களம் இறக்கி பாஜகவுக்கு எதிராக பொய்யான செய்தியை திமுக எம்எல்ஏ மூர்த்தி பரப்பி வருவதாக மதுரை மாவட்ட பாஜகவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். மதுரை புறநகர் மாவட்ட பாஜகவினர் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியை கைப்பற்ற கிழக்கே எங்கள் இலக்கு என்ற வாசகத்துடன் அந்த தொகுதி முழுவதும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திமுக எம்எல்ஏ மூர்த்தி குறித்த ஊழல் குற்றசாட்டு, மேலும் அவர் மீது உள்ள குறைகளை தொடர்ந்து மக்கள் மத்தியில் பாஜகவினர் பிரச்சாரம் செய்துவருவதை எதிர் கொள்ள முடியாமல் திணறிவருகிறார் திமுக எம்எல்ஏ மூர்த்தி, பாஜக இளைஞரணி மாநில செயலாளர் சங்கரபாண்டி சில மாதங்களுக்கு முன் மூர்த்தி குறித்து வெளியான ஊழல் குற்றசாட்டு அடங்கிய செய்தியை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததற்காக அவர் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுப்பட்ட CCTV காட்சி வெளியாகி தொகுதி பக்கம் தலை காட்ட முடியாமல் சில நாள் திமுக எம்எல்ஏ மூர்த்தி தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூர்த்தியின் அடாவடி போக்கின் காரணமாக பொதுமக்கள் மத்தியில் மட்டுமில்லாமல் அவர் சார்ந்த திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது, இதன் காரணமாக சமீபத்தில் திமுக செயல்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்த அதே தேதியில் மதுரை ஊமச்சிகுளம் அருகே பாஜக அமைப்பு சாரா மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கில் திமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர், அப்போது அவர்கள் திமுக அடையாள அட்டையை தூக்கி காலில் போட்டு மிதித்த புகைப்படம் தமிழகம் முழுவதும் சமூக ஊடகத்தில் வைரலானது.

இதனை தொடர்ந்து பாஜகவின் அசூர வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாத திமுக எம்எல்ஏ மூர்த்தி, மேலும் பொது மக்கள் மத்தியில் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்க, திமுக ஆதரவு ஊடகங்களை களத்தில் இறக்கி தனக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிராகவும் செய்திகள் வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது, சமீபத்தில் கலைஞர் டிவியில் தன்னை பற்றி புகழ்ந்து மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர் போன்று பில்டப் அடங்கிய வீடியோ ஓன்று ஒளிபரப்பானது.

இதனை தொடர்ந்து திமுக குடும்ப உறுப்பினர் நடத்த கூடிய தினகரன் பத்திரிகையில் பாஜக மதுரை திருப்பாலை மண்டல் தலைவர் சுரேஷ் திமுகவில் இணைந்துவிட்டதாக பொய்யான செய்தியை வெளியிட்டது. ஆனால் இதுகுறித்து சம்பந்தபட்ட சுரேஷ் என்பவர் திட்டவட்டமாக மறுத்தர், மேலும் தான் தொடர்ந்து பாஜகவில் தான் இருந்து வருகிறேன், இந்த செய்தியின் பின்னனியில் திமுக எம்எல்ஏ மூர்த்தி இருப்பதாக குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில் தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட பாஜக குறித்து பொய் செய்திகளை வெளியிட்டு வரும் திமுக ஆதரவு ஊடகங்கள், இரு தினகளுக்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது, அதில் மதுரை புறநகர் பகுதியில் பணம் கொடுத்து பாஜகவினர் கட்சியில் இணைப்பதாக சிலரிடம் பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார், அதில் குறிப்பாக பாஜக அமைப்பு சாரா மாவட்ட தலைவர் அருண்குமார் குறித்து கடுமையான விமர்சனங்கள் அந்த வீடியோவில் இடப்பெற்றுள்ளது.

இது குறித்து அருண்குமாரை நாம் தொடர்புகொண்டு கேட்ட போது. எங்களை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் திமுக ஆதரவு ஊடகங்கள் உதவியுடன் திமுக எம்எல்ஏ மூர்த்தி பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். பணம் கொடுத்து பாஜகவில் ஆட்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றசாட்டுகளை நிரூபிக்க முடியுமா.? என கேள்வி எழுப்பியவர், ஆனால் நாங்கள் திமுக எம்எல்ஏ மீது கூறப்படும் அணைத்து குற்றச்சாட்டுகளுக்கு எங்களிடம் ஆதாரம் இருக்கு என தெரிவித்தவர், இது போன்ற கீழ்தரமாக செயலுக்கு அஞ்சிவிட மாட்டோம் என தெரிவித்தார்.