சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் தனியாக சந்தித்து பேசினார் துக்ளக் ஆசிரியர், ஆடிட்டர் குருமூர்த்தி, இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் வரை நீடித்தது, சில முக்கிய அரசியல் முடிவுகள் இந்த சந்திப்பின் போது ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தனியார் தொலைக்கட்சி நேர்காணலில் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து எழுப்பிய நெறியாளர் கேள்விக்கு ஆடிட்டர் குருமூர்த்தி அளித்த பதில் தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, அதிமுகவின் உதவி பாஜகவுக்கு தேவைப்பட்டது, ஆனால் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் உதவி தான் அதிமுகவுக்கு தேவைப்படுகிறது, ஒரு கூட்டணி பலம் தரவில்லை என்றால் அந்த கூட்டணி உடைவது இயல்பு என தெரிவித்த ஆடிட்டர் குருமூர்த்தி. வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மற்றவர்கள் ஆட்சி அமைக்க உதவி செய்யவேண்டும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு கிடையாது.
அவர்களுக்கு இருக்கும் வாக்கு வங்கியை நிரூபிக்க தனித்து போட்டியிடவும் வாய்ப்புகள் இருக்கு என தெரிவித்த ஆடிட்டர் குருமூர்த்தி, 2021 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற கட்டாயம் அதிமுகவுக்கு இருக்கிறது, ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற கட்டாயம் பாஜகவுக்கு கிடையாது என திட்டவட்டமாக பேசினார், மேலும் அதிமுகவின் நிலை என்ன என்பது அவர்களுக்கே தெரியாது என ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த சில நாட்களில் இது போன்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்து அவர்கள் கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணியில் ரஜினிகாந்த் இடப்பெற வாய்ப்புகள் இருப்பதால் தான், இது போன்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.