சமீபத்தில் நடந்து முடித்த 113வந்து தேவர் குருபூஜையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடம் சென்றார் அப்போது அங்கே கொடுக்கப்பட்ட விபூதியை கீழே தட்டிவிட்டு ஸ்டாலின் உதாசீன படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதனை தொடர்ந்து குறிப்பாக முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளதை தொடர்ந்து சமூக வலைதளத்தில் திமுகவை ஐடி பிரிவு செயலாளர் PTR தியாகராஜன் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்ததாக ஒரு சர்ச்சைக்குரிய வகையில் போலியாக சித்தரிக்கப்பட்டு சமூக வளைத்தளத்தில் ஒரு பதிவு ஓன்று வைரலாகி வருகிறது, இது ஏற்கனவே தேவர் நினைவிடத்தில் விபூதியை தட்டிவிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் மீது கடும் கோவத்தில் இருக்கும் முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாரதிய பார்வார்ட் பிளாக் கட்சி தலைவர் முருகன் ஜி கூறுகையில்,PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தாத்தா வெள்ளைக்காரனுக்கு காட்டி கொடுத்து, வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி சொத்து சேர்த்து கோடீஸ்வரர் ஆனது PT ராஜன் குடும்பம், ஆனால் பசும்பொன் தேவர் அவர்கள் தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இந்த தேசத்துக்காக தியாகம் செய்தவர் தேவர் அவர்கள் என தெரிவித்தர் முருகன் ஜி.
இந்நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை வெடித்துள்ளதை தொடர்ந்து, இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள PTR தியாகராஜன் தனது டிவீட்டர் பக்கத்தில், பசும்பொன் திரு முத்துராமலிங்கனார், எனது தாத்தா தமிழவேள் P T ராஜன் புகழுக்கும், எனது பெயருக்கும் களங்கம் கற்பித்து, சமூக அமைதியை குலைக்கும் வகையில், போலி செய்தியை உருவாக்கி பரப்பிய பேஸ்புக் பயனருக்கு எனது கண்டனங்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.