மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 21ம் தேதி சென்னை வந்தார், அரசு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு என அணைத்து நிகழ்ச்சியையும் முடித்து விட்டு சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இரவு தங்கியிருந்தார்,மறுநாள் அதிகாலை RSS முக்கிய தலைவரை லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வரவழைத்து சந்தித்துள்ளார் அமித்ஷா, அப்போது உத்தரப்பிரதேஷ், கர்நாடக போன்று தமிழக அரசியல் களத்தில் RSS இயக்கத்தை களம் இறக்க உத்தரவிட்ட அமித்ஷா, அதற்க்கான வேலையை உடனே தொடங்க வலியுறுத்தியுள்ளதாக கூறபடுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் தொகுதிக்கு தலா 100 முதல் 150 வரை RSS நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் நிர்வாகிகளை தமிழக அரசியல் களத்தில் இறக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தை பொறுத்தவரை RSS நிர்வாகிகள் யாரும் தங்களை வெளிப்படையாக RSS நிர்வாகிகள் என்று காட்டி கொள்ளமாட்டார்கள், ஆனால் தமிழக முழுவதும் அங்காங்கே RSS இயக்கம் ஆங்காங்கே குழுவாக செயல்பட்டு வருகிறது.
கடந்த மூன்று வருடங்களாக நடைபெறும் வியதசமி அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த RSS ஊர்வலத்தில் பெரும் திரளாக பங்குபெற்ற RSS நிர்வாகிகளின் அணிவகுப்பை பார்த்து திகைத்து போய் நின்றனர் RSS சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள், இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்து குடும்பங்களை RSS நிர்வாகிகள் நேரில் சந்தித்து இந்துக்களுக்கு எதிராக திமுகவின் நிலைப்பாடு குறித்தும் மேலும் பாஜகவின் சாதனைகளை பற்றியும் எடுத்துரைக்க உள்ளனர்.
டிசம்பர் மாதம் தொடங்க உள்ள இந்த திட்டம் சுமார் ஒவொரு குடும்பத்தையும் சந்தித்து குறைந்தது 30 நிமிடம் முதல் ஒருமணி நேரம் வரை பேசி இந்துக்கள் ஓட்டு வங்கியை வலுவாக்கும் முயற்சியில் RSS நிர்வாகிகள் செயல்பட இருக்கின்றனர், இது குறித்த முடிவு அமித்ஷா உடன் RSS நிர்வாகிகள் சந்தித்து பேசியபோது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.