தமிழகம் வருகிறார் அமித்ஷா..! தேர்தல் முடியும்வரை தமிழகத்தில் தங்கி வியூகங்களை வகுக்க திட்டம்.!

0
Follow on Google News

தமிழக அரசு சார்பில் சென்னை அருகே தேர்வாய் கண்டிகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வரும் 21-ம் தேதி நடக்கஉள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா வரும் 21-ம்தேதி சென்னை வருகிறார். அமித்ஷா தமிழகம் வருவதையொட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷா பாஜக தேசிய தலைவராக இருந்த போது அவர் பார்வை தமிழகத்தின் மீது எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களையும் தயார் செய்து வைத்திருந்தார், ஆனால் அதிமுக தலைமையின் நிலைப்பாடு அமித்ஷாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்த கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை கண்டுகொள்ளாமல் மற்ற மாநிலக்களில் கவனம் செலுத்த தொடங்கினர் அதன் விளைவு அதிமுக கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதி தவிர மற்ற அணைத்து தொகுதிலும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தற்போது இருந்து வந்தாலும் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்கள் அமித்ஷாவின் நேரடி பார்வையில் தான் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கிவிட்ட அமித்ஷா தற்போது தமிழகத்தில் தனது அரசியல் ஆட்டத்தை ஆட தொடங்கியுள்ளார், மேலும் அமித்ஷாவின் தேர்தல் வியூகங்களை மறுப்பு தெரிவிக்காமல் பின்பற்ற தயாராக இருப்பதாக அதிமுக தரப்பில் இருந்து அமித்சாவுக்கு உறுதி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகின்ற 21ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா தற்போது அவருக்கு உளவுதுறை கொடுத்த தகவலின் படி என்ன செய்யவேண்டும் என்பதை தெரியபடுத்திவிட்டு டெல்லி திருப்பும் அமித்ஷா, அடுத்த சில வாரங்களில் மீண்டும் தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது, இரண்டாவது முறை அமித்ஷா வரும் போது குறைந்தது 5 நாட்கள் வரை தமிழகத்தில் தங்க இருப்பதாக கூறப்படுகிறது, இதற்காக அமித்ஷா தங்குவதற்கான அணைத்து ஏற்பாடுகளையும் தமிழகத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அமித்ஷா தங்கும் அந்த 5 நாட்களில் யாரை அமித்ஷா சந்திக்க இருப்பதற்கான அட்டவணைகளை தயாரிக்கும் பணியிலும் அந்த மூத்த பத்திரிகையாளர் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் உடன் நெருக்கிய தொடர்பில் இருக்கும் அந்த மூத்த பத்திரிகையாளரை அவ்வப்போது அமித்ஷா தொடர்பு கொண்டு தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டு தெறிந்து கொள்வதாக கூறபடுகிறது.

வருகின்ற 21 ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா போயஸ் கார்டன் சென்று ரஜினிகாந்த் அவர்களை சந்திக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் வருகின்ற தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் பயத்தில் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.