இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113வது ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, இந்நிலையில் பசும்பொன் தேவர் அவர்களின் வாரிசு யார்.? என முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் அவர்கள் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, அவர் பேசியதாவது, தமிழகம் ஆன்மீகம் மண் என்றும் தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என சொன்ன பசும்பொன் தேவர் பிறந்த மண் தமிழகம் என குறிப்பிட்ட பேராசிரியர்.
மேலும், பசும்பொன் தேவர் அவர்களின் வாரிசு யார் என்பதை குறிப்பிட்ட பேராசிரியர், யாரெல்லாம் தமிழகத்தில் தேசியத்தையும், தெய்விகத்தையும் போற்றுகிறார்களோ அவர்கள் அனைவரும் பசும்பொன் தேவர் அவர்களின் வாரிசுகள் என்றும். யார் தேசத்தை மதிக்கிறார்களோ, இந்து தர்மத்தை போற்றுகிறவர்களோஅவர்கள் மட்டும் தான் பசும்பொன் தேவர் அவர்களின் பெயரை குறிப்பிடும் உரிமை உண்டு என பேசினார்.
தொடர்ந்து முக்குலத்தோர் சமூக மக்களிடம் பேசிய பேராசிரியர், சுய ஜாதி பற்று பிற ஜாதி நட்பு என தொடர்ந்து நாங்கள் முழங்கி வருவதாக குறிப்பிட்டவர், ஒவ்வொரு சமூகமும் அவர்களின் சமூகம் மீது பற்றுடன் இருக்க வேண்டும், அதே போன்று மற்ற சமுதாயத்தை பகைமையாக பார்க்க கூடாது, நட்பு சமுதாயமாக பார்க்க வேண்டும் என தெரிவித்த பேராசிரியர், இந்த கருத்தை இந்த சமுதாயம் புரிந்து கொள்ள முடியாது என்றால் தமிழக்தில் வேறு எந்த சமுதாயமும் புரிந்து கொள்ள முடியாது.
பசும்பொன் தேவர் அவர்கள் அணைத்து சமூகத்துக்கு சொந்தகாரராக இருந்தார், அனைவரும் போற்றி புகழ வழி விடும் இடத்தில் இருந்தவர், அதே போன்று நட்பு உறவை உருவாக்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் அவர்கள் முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.