ஆந்திராவில் கொரோனவால் 26 மாணவர்கள் பலி.!தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது.? கல்வி அமைச்சர் விளக்கம்.!

0
Follow on Google News

தருமபுரியில் நேற்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த 112 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கிய பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரை இன்னும் பல்வேறு சாதனைகளை முதலமைச்சர் துணையோடு நாங்கள் நிறைவேற்ற இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தான் தொலைக்காட்சி மூலமாக பாடத்திட்டங்களை எடுத்துச் செல்கிறது. அட்டவணை மூலமாக மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக அமைந்து இருக்கிறது. மற்ற மாநிலங்களை பார்க்கின்ற போது கேரளாவை தவிர அண்டை மாநிலங்கள் ஆன்லைன் மூலமாக தான் கல்வியை கற்கின்ற ஒரு நிலை இருக்கின்ற பொழுது மாற்றங்கள் தமிழ்நாட்டிலேயே உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னால் ஒரு சேனலை கல்வி சேனல் என்ற முறையில் உருவாக்கினார். அதன் மூலமாக நாம் இந்த பாடத்திட்டத்தை எடுத்துச் செல்கிறோம். அதுமட்டுமல்ல சனிக்கிழமையன்று ஏறத்தாழ 6 மணி நேரம் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை விளக்குவதற்கும் ஏதுவாக கல்வி சேனல் மூலமாக ஒலிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் மாணவர்கள் உடனடியாக செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஹெல்ப்லைன் என்று சொல்லப்படுகின்ற 14417 என்ற எண்ணை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை. கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் அவசரப்பட்டு பள்ளிகளை திறந்தார்கள். அதில் 26 மாணவர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டு இருக்கிறது. எங்களுக்கு மாணவர்களின் உயிர் தான் முக்கியம். இதனை மனதில் கொண்டு முதலமைச்சர் கொரோனோ வைரஸ் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, வருவாய்த்துறை, உயர்கல்வித்துறை ஆகிய துறைகளுடன் ஆய்வு நடத்த இருக்கிறார். பள்ளிகள் திறப்பு எப்போது என்பதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.