திமுகவில் இணைகிறாரா சகாயம் ஐ.ஏ.எஸ்.? அரசு பணியில் இருந்து ஓய்வு பெற சகாயம் விண்ணப்பம்.!

0
Follow on Google News

சகாயம் ஐ.ஏ.எஸ். திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாளுக்கு நாள் திமுகவின் வளர்ச்சி சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, பாஜக எதிர்ப்பு,மோடி எதிர்ப்பு என தமிழக மக்களை திசை திருப்பி வெற்றி பெற்ற திமுகவின் செல்வாக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மிக பெரிய சரிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

திமுகவின் துணை செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி தொடங்கி திமுக எம்.எல்.ஏ குக.செல்வம் என திமுகவில் ஒவொருவராக பாஜக பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர், மேலும் பிரபல IPS அதிகாரியாக இருந்த அண்ணாமலை பாஜகவில் இணைந்த பின் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அண்ணாமலை IPS, அவரின் பேச்சு ஆற்றல் காரணமாக செல்லும் இடமெல்லாம் அவர் முன்னிலையில் பாஜகவில் இளைஞர்கள் இணைந்து வருவது பாஜகவின் செல்வாக்கு கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் வாய்ஸ் கொடுப்பர் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பத்து வருடமாக ஆட்சியில் இல்லாத திமுக இம்முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக இளைஞர்களை தான் பக்கம் கொண்டுவர ஐ.ஏ.எஸ். சகாயத்தை திமுகவில் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுவருவதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

அந்த தகவலை உறுதி செய்வது போன்று, தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 6 வருடமாக பதவி வகித்து வரும் நிலையில் விஆர்எஸ் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. விஆர்எஸ்க்கு விண்ணப்பித்த சகாயம் 2 மாதங்களில் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

இந்நிலையில் ஏற்கனவே மறைமுகமாக பாஜக எதிர்ப்பு, திமுக ஆதரவு அரசியல் செய்து வந்த சகாயம் ஐ.ஏ.எஸ். இனி திமுகவில் இணைந்து முழு நேர அரசியல்வாதியாக முழு வீச்சில் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்வார் என கூறப்படுகிறது.