பாமக முக்கிய தலைவராக இருந்தவர் காடுவெட்டி குரு, பாமக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர், வன்னியர் சங்க தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என முக்கிய பதவிகளை வகித்து வந்த அவர், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக அவர் பேசும் அனல் பறக்கும் பேச்சு அவர் சார்ந்த சமூக இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது, மேலும் அது பாமகவுக்கு பலமாக இருந்தது, வட தமிழகத்தில் நடக்கும் நாடக காதலை கடுமையாக எதிர்த்தவர் காடுவெட்டி குரு.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு உடல்நல குறைவினால் மரணம் அடைந்தார் காடுவெட்டி குரு,இது பாமகவுக்கு பெரும் இழப்பாக அமைந்தது. அதன் பின் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது, இதற்கு காடுவெட்டி குரு மறைவு ஒரு காரணமாக கூறப்பட்டது, இந்நிலையில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக எம்பி செந்தில்குமார் இதுவரை பாமகவுக்கு எதிராக திமுகவில் முன்னிலை படுத்தப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் காடுவெட்டி குரு மகன் கனலரசன் சந்தித்துள்ளார். ஏற்கனவே ராமதாஸ் மீது அதிருப்தியில் உள்ள கனலரசனை பாமகவுக்கு எதிராக களம் இறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது, இந்நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவதால் அவரை திமுக ஓரம் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் திமுக கூட்டணியில் பங்குபெற பாமகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டணிக்கு பாமக வராத பட்சத்தில் பாமகவுக்கு எதிராக காடுவெட்டி குரு அவர்களின் மகன் கனலரசனை களம் இறக்க திமுக ஆயத்தமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.