தமிழ் தேசியம் அமைப்போம் என தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி தற்போது விடுதலை சிறுத்தை கட்சியின் B டீம் ஆக செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது, திருமாவளவனின் ஆதரவாளர்கள் சிலர் திட்டமிட்டு நாம் தமிழர் கட்சியில் ஊடுருவி தற்போது நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈழ போரை மய்யமாக கொண்டு தொடங்கிய கட்சி நாம் தமிழர் கட்சி, உலகம் முழுவது புலம் பெயர்ந்துள்ள இலங்கை தமிழர்களிடம் தமிழ் தேசியம் அமைப்போம் என பிரச்சாரம் செய்து, அவர்களிடம் இருந்து வசூல் செய்து தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி காலப்போக்கில் தமிழ் தேசியம் என்கிற பாதையில் இருந்து தடம் மாறி தலித் அரசியல் பேசி வருகிறது, மேலும் திருமாவளவனின் கைப்பாவையாக செயல்ப்பட்டு வருவதை அறிந்த நாம் தமிழர் கட்சியை தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இருந்தவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து, கல்யாண சுந்தரம், ராஜிவ் காந்தி, மற்றும் வினையரசு போன்ற நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்த கட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர், இதன் பின்னனியில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையில் இருக்கும் இடும்பவான் கார்த்தி போன்ற திருமாவளவனின் ஆதரவாளர்கள் பெருமளவில் அக்கட்சியை ஆக்கிரமித்து கொண்டு சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியை தாங்கள் கட்டுக்குள் வைத்துள்ளதாக தெரிகிறது.
அந்த கோபத்தில் வெளிப்பாடு தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து கல்யாணம் சுந்தரம் போன்றோர் வெளியேற காரணம் என கூறப்படுகிறது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது தமிழகம் முழுவதும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனை மட்டும் எதிர்த்து போட்டியிட வில்லை, மேலும் இலங்கை போரின் போது முக்கிய காரணமாக இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக காட்சிகளை மெல்லிய போக்கில் விமர்சனம் செய்துவிட்டு பாஜகவை கடுமையாக நாம் தமிழர் கட்சி விமர்சனம் செய்து வருவது பின்னணியிலும் திருமாவளவன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை தமிழர்களிடன் வசூல் செய்து கட்சி தொடங்கிய சீமான், அதே இலங்கை தமிழர்களை படுகொலை செய்த காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனின் B டீம் ஆக செயல்பட்டு வருவது இலங்கை தமிழர்களுக்கு சீமான் செய்யும் துரோகம் என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது, மேலும் பல்வேறு அரசியல் நகர்வுகளை தனது B டீம் நாம் தமிழர் கட்சி மூலம் வெற்றிகரமாக திருமாவளவன் செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.