சமீப காலமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடவடிக்கைகள் மீது முரண்பாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து பலர் விலகி வருகின்றனர், இந்த நிலைமை தொடர்ந்தால் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கல்யாண சுந்தரம். நான் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார்.
இது தொடர்பாக அவர் சீமானுக்கு எழுதியுள்ள விலகல் கடிதத்தில், சமீப காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் பணியாற்றியுள்ளதாக தெரிவித்துள்ள கல்யாணசுந்தரம், தன்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான ராஜிவ் காந்தி விலகினார்.
இந்நிலையில் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைவரும் விலகி வரும் நிலையில் கும்பகோணத்தில் நாம் தமிழர்கட்சியின் சட்டமன்ற வேட்பாளராக சௌராஷ்டிர இனத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரை சீமான் அறிவித்திருப்பதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் நகர தலைவர் புபேஷ் குப்தா தலைமையில் 700க்கு மேற்பட்டவர்கள் கூண்டோடு விலகியுள்ளனர், கும்பகோணம் பூத் கமிட்டியை கலைந்த அவர்கள் பூத் கமிட்டி கட்டமைப்பு படிவத்தை அரசால் ஆற்றில் வீசினார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழ் நாடு தமிழருக்கே என கோஷமிடும் சீமான், மராட்டியர் இனத்தை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள கூடாது என பேசிவிட்டு, தற்போது பனத்தை பெற்று கொண்டு சௌராஷ்டிர இனத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளதை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்தனர்.