சென்னையில் கடும் மழை.! நடிகையிடம் ஆலோசனை கேட்ட உதயநிதி ஸ்டாலின்.! என்னாச்சு இவருக்கு,?

0
Follow on Google News

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதேபோல், புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தனது டிவீட்டர் பக்கத்தில், வீடு – சாலை எங்கும் வெள்ளம். ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கிறது. உள்ளாட்சித் துறையை ஊழலாட்சித் துறை ஆக்கிவிட்ட வேலுமணியும் , அவரது டெண்டர் பார்ட்னர் எடப்பாடியும் அவதூறு போஸ்டர் ஒட்டிய நேரத்தில் கொஞ்சமாவது வடிகால்களை தூர்வாரியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது 2015 வெள்ளத்திலிருந்து அடிமைகள் பாடம் கற்கவில்லை.

மாறாக இன்னும் வீரியமாக ஊழல் செய்கின்றனர். வெள்ளத்தடுப்பு பணிக்கான நிதியை வேலுமணியின் ஏழு கம்பெனி பினாமிகள் – மாநகராட்சி ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே இந்த அவலத்துக்கு காரணம். மக்கள் மறக்க மாட்டார்கள் அடிமைகளே.என பதிவு செய்த உதயநிதி அடுத்த பதிவில் ஒவ்வொரு முறையும், கடும் மழைக்கு சென்னை இரையாகிறது. இதற்கு தீர்வே கிடையாதா? என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் ஆலோசனை கேட்டுள்ளது பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே ஹிந்தி தெரியாது போடா என வாசகம் அடங்கிய டீ-சர்ட் அணிந்து பெரும் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை மீண்டும் ஏதேனும் சிக்கலில் சிக்க வைக்க உதயநிதி ஸ்டாலின் முயற்சி செய்கிறாரா.? என மக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.