நான் வசதி படைத்த எம்பியா.? ரஜனிகாந்த் குறித்து சர்ச்சை பதிவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விளக்கம்.!

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் மாநகராட்சிக்கு வரி செலுத்துவது தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பில் உயர்நிதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி, ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீண்டிக்க கூடியதாக உள்ளது. உடனடியாக வழக்கை வாபஸ் பெறுவதற்கான உறுதியளிக்க வேண்டும், இல்லையென்றால் என ரஜினிகாந்த் மீது அபராதம் விதிக்க நேரிடலாம் என எச்சரித்தார்.

நீதிபதியின் எச்சரிக்கையை அடுத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் ரிட் மனுவை வாபஸ் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், கோடிஸ்வரர்களின் சொத்துக்கெல்லாம் வரி போடறாங்க. அதை எதிர்த்து நீதிமன்றம் போனால் அங்கே எச்சரிச்சு அனுப்பறாங்க.சிஸ்டம் சரியில்லை என கருத்து பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவு சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து, வலைதளவாசி ஒருவர், நீங்க வசதியானவர் தானே? எங்க சொல்லுங்க உங்களுக்கு எம்பி கோட்டாவில் கிடைக்க கூடிய ஒரு சலுகையாவது வேண்டாம் என சொல்லி இருப்பீங்களா.. சொல்லமாட்டீங்க ஏன்னா அது உங்க உரிமை, அது மாதிரி தான் இது உழைத்து சாப்பிடுபவரின் உரிமை..திகார் சிறையில் இப்ப வசதி எப்படி என்று உங்கள் நண்பர்கள் கிட்ட சொல்லுங்க என காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு பதிலளித்தார்,

இதற்கு ஜோதிமணி நான் வசதியான MP அல்ல. சம்பளம் மட்டுமே. அதிலும் ஆதரவற்ற முதியோர் 10 பேருக்கு மாதம் ரூ1000- 10,000 கொடுக்கிறேன்.MP க்கு விமானத்தில் பிஸினஸ்வகுப்பு உண்டு.ஆனால் எளிய மக்கள் பயன்படுத்தும் எகானமி வகுப்பையே பயன்படுத்துகிறேன்.தொகுதிபணி தவிர எதற்கும் MP கோட்டாவை பயன்படுத்துவதில்லை என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விளக்கம் கொடுத்துள்ளார்.