நிர்மலா சீதாராம் குறித்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வசமாக சிக்கிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.!

0
Follow on Google News

தொடர்ந்து பொய்யான தகவல்களை வெளியிட்டு பாஜக அரசுக்கு எதிராக விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஜோதிமணி பள்ளிகூட ஆயம்மா வேலைக்கு கூட தகுதி இல்லாத ஒரு நபர், ஆனால் இவர் பாராளு மன்ற உறுப்பினராக இ௫ப்பது க௫ா் மக்களின் தலையெழுத்து என கண்டனங்கள் எழுந்துள்ளது, தொடர்ந்து பலமுறை பொய் பேசி கையும் களவுமாக சிக்கி கொண்ட ஜோதிமணி, மீண்டும் மீண்டும் தொடர்ந்து பொய் பேசி வருவது வாடிக்கையாக இருக்கிறது.

பீகாரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனாவுக்கு இப்போது உலகில் மருந்தே இல்லை, மருந்து வந்தவுடன் அதை மக்களுக்கு இலவசமாக கொடுப்போம் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார், ஆனால் இதை சிலர் திட்டமிட்டு, “கொரோனா மருந்தினை இலவசமாக தருகின்றோம் என சொல்லி பீகார் மக்களை ஏமாற்றுகின்றது பாஜக” என பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே பொய் பிரச்சாரத்தை காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் தொடங்கியுள்ளார், அவர் இது குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில், வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் மக்களை கண்டுகொள்ளாத அரசு இன்னும் கண்டுபிடிக்காத தடுப்பூசியை இலவசமாக கொடுப்பேன் என்று ஓட்டரசியல் செய்வது வெட்கக்கேடு. தடுப்பூசியை இலவசமாக கொடுக்கவேண்டியது அரசின்கடமை. போலியோ தடுப்பூசி இந்தியாவில் இலவசம். காங்கிரஸ் அதைவைத்து வாக்கு கேட்டதில்லை என நிதி அமைச்சர் பேசியதை திரித்து வழக்கம் போல் தனது பொய் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.

இந்நிலையில் பொய் கூறுவதில் பெயர் பெற்றவர் என்று அழைக்கப்படும் ஜோதிமணியின் பொய்யான தகவலுக்கு பலர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர், அதில், காங்கிரஸ் போலியோ தடுப்பூசியை மானிய விலையில்தான் கொடுத்தது. இலவசமாக கொடுக்கவில்லை. மானியவிலைக்கு பெற்ற மாநிலங்கள் தங்கள் மானியத்தையும் சேர்த்து இலவசமாக மக்களுக்கு கொடுத்தன. பொய்களையே கூறுவதை வழக்கமாக கொண்டிருக்கும் காங்கிரஸும் அதன் தலைவர்களும் வெட்கப்பட வேண்டும் என்றும்,

மேலும் தொடர்ந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பள்ளிகூட ஆயம்மா வேலைக்கு கூட தகுதி இல்லாதவர், இவரை பாராளு மன்ற உறுப்பினராக இ௫ப்பது க௫ா் மக்களின் தலையெழுத்து என்று அரசியல் விமர்சகர்கள் ஜோதிமணிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர், சமீபத்தில் கரூர் தொகுதியில் நடைபெற்று வரும் சிட்கோ தொழிற்சாலை பணிகளை தடுத்து நிறுத்த முற்பட்ட ஜோதிமணியை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.