பாஜக சார்பில் வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6 வரை தமிழ்க்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் வெற்றிவேல் யாத்திரை நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து சென்னைா தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெற்றிவேல் யாத்திரைக்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றி வேல் யாத்திரை பற்றி பாஜக மாநில தலைவர் எல். முருகன், கூறியதாவது,
”வெற்றிவேல் யாத்திரை தமிழகத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் யாத்திரையாக இருக்கும். மூன்று மாதங்களுக்கு முன்பு கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தியிருந்தார்கள். அதில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அது போதாது. இந்த கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் திமுக தான் இருக்கிறதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இந்துக்களின் மனதைப் புண்படுத்துவது திமுகவுக்கு வாடிக்கையாக இருக்கிறது.
அவர்களைப் போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்கவும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கிச் சொல்லவும் வருகிற சட்டமன்ற தேர்தலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் வகையில் வெற்றிவேல் யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளோம். என தெரிவித்துள்ளார், இந்நிலையில் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்,
இந்நிலையில் வெற்றிவேல் யாத்திரைக்கு தடைவிதிக்க கோரிக்கை விடுத்த திருமாவளவனுக்கு பதிலளித்துள்ள பாஜக முன்னாள் தேசிய செயலாளர், H.ராஜா தனது டிவீட்டர் பக்கத்தில், தீயசக்தி திருமாவளவனால் ஸனாதன இந்து தர்ம ஒழிப்பு மாநாடு திருச்சியில் நடத்தப்பட்டது. அதில் இந்து விரோதிகள் ஸ்டாலின், வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் பாஜக வெற்றிவேல் யாத்திரை நடத்தக் கூடாதாம். சரக்கு மிடுக்கு பேச்சு திருமாவளவன் கோரிக்கை. களத்தில் சந்திப்போம் என H.ராஜா சவால் விடுத்துள்ளார்.