நடிகர் விஜயகுமார் மகள் வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றுள்ளார். அந்த இரண்டு கணவர்களுக்கு குழந்தைகள் உள்ளது, இந்நிலையில் மூன்றவது முறையாக பீட்டர் பால் என்பவரை கிருஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார், அவர் திருமணம் செய்து கொண்ட பீட்டர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெறாத நிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில் பெரு சர்ச்சைகளுக்கு பின் புதுமண தம்பதியராக வலம் வந்த வனிதா-பீட்டர் பால் ஜோடி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது, குடிபோதையில் வணிதாவிடம் தகராறு செய்துள்ளார் பீட்டர் பால், ஒரு கட்டத்தில் கோவம் அடைந்த வனிதா பீட்டர் பாலை வீட்டின் இருந்து வெளியில் தர தரவென இழுத்து வீட்டை விட்டு வெளியில் துரத்தி அடித்துள்ளார், இதனை தொடர்ந்து இந்த ஜோடி தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் பிரிவுக்கு காரணம் என்ன என்பது பற்றி வனிதா கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது கணவரை பிரிந்துள்ள வனிதா நான்காவதாக முன்னாள் காதலன் நடன இயக்குனர் ராபர்ட் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இரண்டாவது கணவரை பிரிந்த பின் ராபர்ட் என்பவரை தான் வனிதா காதலித்து வந்தார், அவரை தான் திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்க பட்ட நிலையில், திடீரென பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது பீட்டர் பால் உடன் ஏற்பட்டுள்ள தகராறில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் வனிதாவை தொடர்பு கொண்டு முன்னாள் காதலன் ராபர்ட் ஆறுதலாக பேசியதாக கூறப்படுகிறது, இருவரும் மனம் விட்டு நீண்ட நேரம் பேசிய பின் மீண்டும் அவர்கள் காதல் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து அடிக்கடி இருவரும் பேசி வருவதாக கூறப்படுவதால் நான்காவது முறையாக வனிதா விஜயகுமார் முன்னாள் காதலன் ராபர்ட் என்பவரை திருமணம் செய்து கொள்வாரா என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.