நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அந்த படத்துக்கு ஆதரவாகவும் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது, இயக்குனர் பாரதிராஜா, சேரன், சீமான் மற்றும் திருமாவளவன் போன்றோர் கடும் எதிப்பு தெரிவித்துள்ள நிலையில், நடிகை ராதிகா உட்பட பலர் விஜயசேதுபதி புதிய படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று கூறுபவர்களுக்கு வேறு வேலை கிடையாதா? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் இருக்கிறார். அந்த அணி ஒரு தமிழருக்கு சொந்தமானது. அவர் அரசியல் தொடர்பு கொண்டவர். எனவே அந்த அணியின் பயிற்சியாளராக முரளிதரன் இருக்கக்கூடாது என்று கேள்வி எழுப்புவார்களா? விஜய் சேதுபதி ஒரு நடிகர், ஒரு நடிகனை கட்டுப்படுத்தாதீர்கள். விஜய் சேதுபதி மற்றும் கிரிக்கெட் இரண்டிலும் முட்டாள்தனங்களைத் திணிக்காதீர்கள்” என்று கூறினார்.
மேலும் அவர் “சன்ரைசர்ஸ், சன் டிவியின் உரிமையாளர்கள் இருவருக்குமே அரசியல் பின்புலம் இருந்தாலும் கூட இத்தனை ஆண்டுகளாக அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு என அவர்கள் ஒவ்வொன்றையும் அதற்கான மரியாதையுடன் கையாண்டுள்ளனர். அதேபோல் ஏன் நமது சினிமாத் துறையால் கையாள முடியவில்லை. கலையை அரசியல் பார்வையில் இருந்து பார்க்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.