கடந்த சில மாதங்களாகவே அதிமுக – பாஜக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜக கூட்டணியே இருந்து வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிமுக. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு நான்கு வருடம் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தொடர்ந்து நீட்டிப்பதற்கு பல்வேறு வகைகளில் பாஜக உதவியாக இருந்து வந்துள்ளது.
மேலும் இதற்கு முன்பு நடந்த டெல்லியில் நடந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய மரியாதையை பிரதமர் வழங்கி கௌரவ படுத்திய சம்பவங்கள் அரங்கேறியது, அப்படி இருக்கையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது பின்னணியில் அமித்ஷாவின் ராஜதந்திரம் உள்ளது என்கின்றது டெல்லி வட்டாரங்கள்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டசபை தேர்தலிலும் திமுக வலுவான வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது அதன் கூட்டணி கட்சிகள் தான. அந்த வகையில் திமுக கூட்டணி பலம் இல்லாமல் போட்டியிட்டால் நிச்சயம் 2019 மற்றும் 2021 தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற்றிருக்க முடியாது என்றும், குறிப்பாக 2021 சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டி இல்லாத ஒரு ஆட்சியை அமைத்திருக்க திமுகவால் அமைத்திருக்க முடியும் என்கிற உளவு துறை ரிப்போர் ஏற்கனவே அமித்ஷா கவனத்துக்கு சென்றதாக கூறப்பட்டது.
மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் போவதற்கு வேறு வழியின்றி தான் திமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். கடந்த கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஸ் அழகிரியை திமுக நடத்திய விதம், 2019 நாடாளுமன்ற தேர்தலில் கடைசிவரை திருமாவளவனுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யாமல் திமுக இழுத்தடிப்பு செய்த சம்பவங்கள் அனைத்தும் அரசியலை உற்று நோக்கி பார்ப்பவர்கள் நன்கு அறிவார்கள்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பாஜகவை விமர்சனம் செய்து வந்தாலும், அதிமுக உடனான திரை மறைவில் உறவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அதிமுக உடன் பாஜக இல்லை என்றால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக உடன் இணைவதற்கான வாய்ப்பு பிரகாசமா இருக்கிறது, அந்த வகையில் தற்பொழுது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள அதிமுக உடன் கூட்டணி அமைக்க திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்த தடையும் இல்லாத சூழல் உருவாவதற்கு பின்னணியில் இருந்து செயல்படுவது டெல்லி பாஜக என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
அதாவது 2016 சட்டசபை தேர்தலில் திமுகவுடன், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை போன்ற காட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் 2016ல் திமுக ஆட்சி அமைத்திருக்கும் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கும், ஆனால் வைகோ மூலமாக மக்கள் நல கூட்டணியை உருவாக்க வைத்து அந்த கூட்டணியில் தேமுதிக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகளை இடம்பெறச் செய்து திமுகவை வீழ்த்தி மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த மக்கள் நல கூட்டணி அமைத்த வைகோ, என்றாலும் வைகோ பின்னணியில் இருந்து செயல்பட்டது ஜெயலலிதா தான் என்பதை தமிழக அரசியல் ஆய்வாளர்கள் பலரும் சூட்டி காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் திமுகவை கூட்டணியை உடைக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான ஆள் எடப்பாடி பழனிச்சாமி என்பதை தேர்வு செய்த டெல்லி பாஜக தலைமை, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினால் மட்டுமே திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எடப்பாடியை நோக்கி வருவார்கள், அந்த வகையில் ஜெயலலிதா எப்படி வைகோவை பயன்படுத்தி மக்கள் நல கூட்டணியை உருவாக்கினாரோ.? அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தி வருகிறது டெல்லி பாஜக தலைமை என்றும்.
இதில் திமுக கூட்டணியை உடைக்க அமித்ஷா போட்டு கொடுத்த அசைன்மெண்ட் தான் தற்பொழுது பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறியது என கூறும் அரசியல் ஆய்வார்கள், அதே நேரத்தில் எடப்பாடி தலைமையில் அமையும் கூட்டணி என்பது, எப்படி 2016 தேர்தலுக்குப் பின்பு விஜயகாந்த் நிலைமையோ அதே தான் எடப்பாடி தலைமையில் அமையும் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்படும் என்றும், மேலும் இன்று வைகோவுக்கு ஏற்பட்ட அதே நிலைதான் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும்.
அந்த வகையில் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்பது போன்று திமுக கூட்டணியை உடைப்பது இரண்டாவது அதிமுகவை அட்ரஸ் இல்லாமல் செய்வது என ஒரே கல்லில் இரண்டு மாங்காவை அடிக்கும் திட்டத்தை தான் அமித்சா உத்தரவின் பேரில் டெல்லி பாஜக தலைமை எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்துள்ள அசைன்மென்ட் என்கின்றனர் டெல்லி வட்டாரங்கள்.