மதுரையில் பெண்களுக்கென்று தனியாக மதுபார்..! எதிர்த்து பாஜக போராட்டம்… வைரல் செய்தி … உண்மை என்ன.?

0
Follow on Google News

தமிழகத்தில் மது பழக்கத்துக்கு அடிமையாகி உள்ள ஆண்களால் பல குடும்பம் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என பெண்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர், மேலும் மது பழக்கத்துக்கு அடிமையாகி பலர் மிக குறைந்த வயதில் இறந்தும் விடுகின்றனர். இதனால் மதுவுக்கு அடிமையாகி உள்ள ஆண்கள் திருந்தி வாழ்வதர்க்கு வழி செய்யும் வகையில்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறு வாழ்வு மையம் என மதுவுக்கு அடிமையாகி உள்ளவர்களை திருத்தி மது பழக்கத்தில் இருந்து அவர்கள் முற்றிலும் விடுபட்டு வாழ்வதற்காக பல மையங்கள் செயல்பட்டு வருகிறது. இப்படி ஒரு சூழல் தமிழகத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது மதுரையில் பெண்களுக்கென்று மது அருந்த தனியாக மதுபார் திறக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகி வரும் அந்த செய்தியில்,மதுரையில் உள்ள விஷால் டி என்ற மாலில் பெண்கள் மது அருந்துவதற்கு என பிரத்தியேகமாக ஓர் பார் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மதுரை மக்கள் தொடக்கத்தில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில காலங்கள் மூடி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் மதுக்கூடம் உள்ள இடம் மதுரை என்ற பெயர் பெற்று உள்ளது.

மேலும் மதுபானத்திற்கு பெண்கள் செல்வது நாளுக்கு நாள் இயல்பாக பார்க்கப்படும் ஓர் விஷயமாக உள்ளது. இது நாள் வரை ஆண்கள் தான் பொதுவாக மது பாருக்கு செல்வார்கள். நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்வார்கள். ஒரு சில பெண்களும் செல்வார்கள்.. ஆனால் இதுவரை பெண்களுக்கென்றே மதுக்கூடம் எங்கும் இல்லை. அந்த வகையில் தமிழகத்தில் மதுரையில் தான் பெண்களுக்கென்றே வைக்கப்பட்டுள்ள சிறப்பு மதுக்கூடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என அந்த வைரல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த செய்தி கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான செய்தி என தெரியவந்துள்ளது. இது குறித்து மதுரையில் உள்ள விஷால் டி என்ற மால் வட்டாரத்தில் விசாரித்ததில், இரண்டு வருடங்களுக்கு முன்பு பெண்களுக்கென்று மது பார் இங்கே புதியதாக தொடங்கி செயல்பட்டது உண்மை தான், ஆனால் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புக்கு பின் நிரந்தரமாக பெண்களுக்கென செயல்பட்ட தனி பார் மூடப்பட்டது என தெரிவித்தனர்.