காமெடி நடிகர் சிங்கம் புலியை ஒரு நகைச்சுவை நடிகராக தான் மக்களுக்கு தெரியும், ஆனால் யாருமே நம்ப முடியாது வகையில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தை இயக்கியவர் தான் தற்பொழுது காமெடி நடிகராக வலம் வரும் சிங்கம் புலி. இவர் இயக்குனராக அறிமுகம் ஆன முதல் படம் ரெட், அந்த வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் சிங்கம்புலி.
அஜித் நடித்த ரெட் படத்தை முழுக்க முழுக்க மதுரை ஸ்லாங்கில் அந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த ஆசைப்பட்டார் சிங்கம் புலி, ஆனால் அஜித்தை வைத்து மதுரையில் படமாக்கப்பட வேண்டும் என்றால் பாதுகாப்பு காரணங்கள் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால், சென்னையில் மதுரை போன்று செட் அமைத்து ரெட் படத்தை இயக்கினார் சிங்கம் புலி.
அஜித் நடித்த ரெட் படத்தை இயக்குவதற்கு முன்பு இயக்குனர் சுந்தர் சி யிடம் உதவி இயக்குனராக அருணாச்சலம், உள்ளத்தை அளித்த போன்ற படங்களில் பணியாற்றினார் சிங்கம் புலி, இந்த நிலையில் இயக்குனராக தன்னுடைய முதல் படம் மதுரையில் மிக பெரிய வெற்றியை பெற்று இருந்தாலும் கூட, மதுரை தவிர்த்து பிற பகுதிகளில் ரெட் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை,
இயக்கிய முதல் படமே தோல்வியை அடைந்ததும் சற்றும் யோசிக்காமல் நாம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று உணர்ந்து இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக செல்கிறார் சிங்கம் புலி, பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் நடித்த நடிகர் சூர்யாவின் கேரக்டர் முழுக்க முழுக்க நகைசுவை கேரக்டராக இயக்கும், இந்நிலையில் சூர்யாவின் பிதாமகன் படத்தின் கேரக்டருக்கு வசனம் சிங்கம் புலி எடுத்தியது.
இந்த படத்தில் சூர்யா உடன் இணைந்து சிங்கம் புலி பணியாற்றிய போது, இருவரும் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது, இதனை தொடர்ந்து சூர்யா அவர் நடித்த பேரழகன் படத்தில் வசனம் எழுந்தும் வாய்ப்பை சிங்கம் புலிக்கு கொடுத்தவர், அடுத்து தான் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார் சூர்யா. அப்படி சிங்கம் புலி இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா இருவரும் நடிப்பில் வெளியான படம் மாயாவி.
இது சிங்கம் புலி இயக்கிய இரண்டாவது படம். ஆனால் இயக்குனராக இரண்டாவது படமும் தோல்வியை தழுவியதை தொடர்ந்து மீண்டும் உதவி இயக்குனராக பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தில் பணியாற்றினார். இதனை தொடர்ந்து மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சிங்கம் புலி நடித்த நகைச்சுவை கதாபாத்திரம் மிக பெரிய அளவில் அவருக்கு பாராட்டை பெற்று கொடுத்து, நகை சுவை நடிகராக சுமார் 140 படங்களுக்கு மேல் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்த சிங்கம் புலி, சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் மிகக் கொடூரமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.
அதில் பாலியல் பலாத்காரம் செய்யும் ஒரு மிகப் கொடூரமான வில்லனாக நடித்துள்ள சிங்கம்புலிக்கு அந்த கதாபாத்திரம் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட பல இயக்குனர்களும் சினிமா துறையை சார்ந்த பலரும் தற்பொழுது சிங்கம் புலியை அழைத்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள. இந்நிலையில் சுமார் 35 வருட போராட்டத்தில் ஒரு இயக்குனராக, காமெடி நடிகராக கிடைக்காத பாராட்டு தற்பொழுது கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் கிடைத்துள்ளதை தொடர்ந்து அடுத்தடுத்து சிங்கம் புலிக்கு வில்லன் கதாபத்திரம் தேடி வர தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.