இங்கிலாந்தில் சமூகப் பரவலானது ஒமிக்ரான் தொற்று… சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

0
Follow on Google News

இங்கிலாந்து நாட்டில் ஒமிக்ரான் உருமாறிய தொற்று சமூகப் பரவலாக மாறிபிட்டதாக அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் சஜித் ஜாவேத் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மூன்றாவது முறையாக உருமாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் முதலாக தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுவரை அந்த வைரஸ் தொற்று 38 நாடுகளில் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி பரவிய நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அந்த நாட்டில் இப்போது ஒமிக்ரான் பரவல் சமூகப் பரவலாக மாறிவிட்டதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவேத் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அதில் ‘வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வராத மக்களிடமும் தொற்று பரவல் அதிகமாகியுள்ளது.

இதனால் மக்கள் பொது இடங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.