அமெரிக்காவின் தற்காலிக அதிபரான கமலா ஹாரிஸ்!

0
Follow on Google News

அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் உடல்நல சோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 1.25 மணிநேரம் தற்காலிக அதிபராக செயல்பட்டார்.
நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப்பை தோற்கடித்து அதிபரானார் ஜோ பைடன். இந்தியா வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இப்போது மேலும் இனிப்பான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.அது என்னவென்றால் அமெரிக்காவின் தற்காலிக அதிபராக கிட்டத்தட்ட 1.25 மணி நேரம் செயல்பட்டுள்ளார். ஜோ பைடனுக்கு குடல் சம்மந்தமாக சில சோதனைகள் செய்யப்பட்ட நிலையில் அவர் மயக்க நிலைக்கு சென்றதால், தன்னுடைய அதிபர் அதிகாரத்தை துணை அதிபரான கமலா ஹாரிஸிடம் அளித்ததாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.