அமெரிக்காவை நம்ப வைத்து கழுத்தறுத்த தாலிபான்கள்… மீண்டும் போர் வெடிக்கும் அபாயம்.!

0

தாலிபன் தலைவர்களில் முல்லா ஓமருக்கு அடுத்த இடத்தில் இருந்தவரும் அந்த இயக்கத்தின் மகா சீனியர்களும் ஒருவருமான அப்துல் கனி பாரதர் பற்றி பரிதாப தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர் உலக செய்தி நிறுவனங்கள். அவர் தாலிபன்களின் அதி முக்கிய தலைவர் ஆவார். முன்பு பாகிஸ்தான் சிறையில் இருந்து பின் அமெரிக்காவால் கத்தாருக்கு கொண்டு செல்லபட்டு சில ஆண்டுகளாக கத்தாரில் இருந்து வருகிறார்.

அங்கே இருந்து கொண்டே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்துல் கனி பாரதர், அவர் தான் அமெரிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்தும் இட்டார். முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் போனில் பேசிய ஒரே தாலிபன் தலைவர் அப்துல் கனி பாரதர் தான். அவருக்கு கத்தார் எல்லா உதவியும் செய்தது, தாலிபன்கள் ஆட்சியினை கைபற்றியதும் இவர்தான் அடுத்த ஆப்கன் அதிபர் எனும் பேச்சுக்கள் எழுந்தன‌

ஆனால் தாலிபன் ஆட்சி பற்றி தாலிபான்களுக்குள் பலத்த சண்டை உருவானது. அரசியல் பிரிவாக கத்தாரில் இருந்த அப்துல் கனி பாரதரை களத்தில் இருந்த ஹக்கானி குரூப் ஏற்க மறுத்தது, கத்தாரில் இருந்து அப்துல் கனி பாரதர் உலகில் தாலிபன்களுக்கு அங்கீராகரம் தேடிதந்து அவர்கள் முகவரியினை மாற்ற முயன்ற ஆதிகால தாலிபன் நிறுவணரின் உழைப்பும் தேவையும் தாலிபான்கள் யாருக்கும் தெரியவில்லை

ஒரு பக்கம் ஹக்கானி குரூப்புடன் இணைந்து பாகிஸ்தான் ஆப்கன் ஆட்சியினை ஆள நினைத்தது. அப்துல் கனி பாரதர் அமெரிக்க சார்பு எனும் தியரி மறுக்கமுடியாது, ஆனால் அதுவன்றி ஆப்கன் அமைதி சாத்தியமில்லை. தொடர்ந்த இழுபறியில் ஆட்சி பற்றிய ஆலோசனையில் 17 பேர் சுடபட்டனர், அதில் அப்துல் கனி பாரதர் ஒருவர் என செய்தி வெளியாகி வருகின்றனர். இதுபற்றி தாலிபன் மவுனம் சாதிக்க கத்தார் அமைச்சரே காபூல் சென்று பாரதரை சந்திக்க தேடியும் முடியவில்லை.

தாலிபன்கள் அமெரிக்காவினை நம்ப வைத்து ஏமாற்றியது புரிந்து அமெரிக்கா கடும் ஆத்திரத்தில் இருக்கின்றது, இதில் பாகிஸ்தானின் துரோக கரங்கள் இருப்பதையும் அமெரிக்க உணர்ந்துள்ளது. தாலிபன்களுக்கு இடம் கொடுத்து அவர்களுக்கு ஒரு நம்பிக்கையாய் இருந்த கத்தாரின் உறவும் முடிந்துவிட்டது இனி மிகபெரிய காட்சிகள் மாறும், யாரை நம்பி அமெரிக்கா வெளியேறியதோ அவரே கொல்லபட்டிருக்கின்றார் என்றால் இனி மிகபெரிய சதிகளெல்லாம் அந்நாட்டில் அரங்கேறும் என்றும்.

மேலும் மறுபடியும் ஆப்கன் விவகாரம் பற்றி எரிய வாய்ப்பு பிரகாசமாக உண்டு, கத்தாரின் பலமான உறவை முறித்த நிலையில் பாகிஸ்தான் எனும் ஒற்றை கயிற்றில் அதுவும் பலமில்லா கயிற்றில் ஆடும் தாலிபன்கள் மிக பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் உலக அரசியல் பார்வையாளர்கள். – ஸ்டான்லி ராஜன்.