மீண்டும் இந்தியாவில் இருந்து ஒரு உலக அழகி…. ஹர்னாஸ் கவுருக்கு குவியும் வாழ்த்துகள்!

0

இஸ்ரேலில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் பட்டம் வென்றுள்ளார். ஆண்டுதோறும் நடக்க பிரபஞ்ச அழகி போட்டி இந்த ஆண்டு இஸ்ரேலில் நடந்து முடிந்துள்ளது. டிசம்பர் 12 ஆம் தேதி நேற்று நடந்து முடிந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.

அதில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் என்ற 21 வயது பெண் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே இந்தியாவில் இருந்து சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் பிரபஞ்ச அழகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை விருது பெற்றவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.