டார்கெட் அமைச்சர் மூர்த்தி… சிக்கிய பினாமியின் அரண்மனை… தட்டி தூக்கும் அமலாக்கத்துறை…

0
Follow on Google News

2025 வருடம் தொடங்கியது முதலே திமுக அமைச்சர்களுக்கு சோதனை காலம் தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும், அந்த வகையில் 2025 வருடம் தொடங்கியது முதலே அடி மேல் அடி வாங்கி கொண்டிருக்கிறது, ஏற்கனவே ஒவ்வொரு அமைச்சர்களாக அவர்களுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வரும் நிலையில், அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற பிடியில் சிக்கி வருகிறார்கள் மற்ற திமுக அமைச்சர்கள்.

அமலாக்க துறை சோதனையில் சிக்கி சுமார் ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு அவர் செய்த போராட்டம் தமிழகம் மறந்து விடாது, பலமுறை ஜாமின் நிராகரிக்கப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று, பின்பு பதவியை இழந்தது, இதெல்லாம் அமலாக்க துறை பிடியில் சிக்கினால் என்னாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைத்தது.

இந்நிலையில் செந்தில்பாலாஜியை அமலாக்க துறை குறி வைத்த போதே, அமலாக்க துறையின் அடுத்த டார்கெட் அமைச்சர் மூர்த்தி என்று பரவலாக பேசப்பட்டு வந்தது, மேலும் 2026 சட்டசபை தேர்தலுக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு திமுக அமைச்சர்கள் அமலாக்க துறையால் குறிவைக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்ப்பார்க்கப்பட்டது போன்றே 2025 வருடம் தொடங்கியதுமே அமலாக்க துறை தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியது.

அமைச்சர் துரைமுருகன் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்ட நிலையில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் மற்றும் கே என் நேரு உறவினர்கள் வீடுகளில் அமலாக்க துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது அமலாக்க துறை.

இப்படி ஒவ்வொரு அமைச்சர்களை குறிவைத்து அமலாக்க துறை இறங்கும் போது, அடுத்த டார்கெட் அமைச்சர் மூர்த்தி தான் என பரவலாக பேசப்பட்டாலும், அமைச்சர் மூர்த்தியை இதுவரை அமலாக்க துறை கைவைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாலை அமலாக்க துறை அதிரடி சோதனையை மேற்கொள்ள இருக்கிறது என்கிற தகவல் வெளியானதும், பெரும்பாலானோர் பார்வை அமைச்சர் மூர்த்தியை நோக்கி திரும்ப, ஆனால் டாஸ்மாக் அலுவலகங்களை குறிவைத்து அமலாக்க துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது.

இப்படி ஒவ்வொரு முறையில் எஸ்கேப் ஆகி வந்த அமைச்சர் மூர்த்தி மீது அமலாக்க துறை ரேடார் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் அமைச்சர் மூர்த்தி குறித்த சில தகவலை வெளியிட்டுள்ளார், அதில் மிக பெரிய கட்டிடத்தின் புகைப்படத்தை பகிர்ந்த மாரிதாஸ், அமைச்சர் மூர்த்தியின் வலது கரம் பினாமி பாலாஜி மதுரை நாகமலை புதுக்கோட்டை மலை அடிவாரத்தில் கட்டும் 30 கோடி மதிப்பிலான அரண்மனை..

வலதுகரத்திற்கே ̀100 கோடி வரை சொத்து சேர்ந்திருக்குறது என்றால் அமைச்சர் மூர்த்தி எவ்வளவு அடிச்சு குவித்திருப்பார் என்பதை கொஞ்சமாது Financial Intelligence Unit, ED , Income Tax எல்லாம் கொஞ்சம் யோசிக்கனும். அடுத்து விஜய் ஆனந்த்.. அமைச்சர் மூர்த்தி நிரந்தரமாக குடும்பத்தோடு சிறையில் இருப்பதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு என அமலாக்க துறையை மரித்தாஸ் டேக் செய்துள்ளார் மாரிதாஸ்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை மிக தீவிரமாக நெருங்க காரணமாக இருந்தது, அவருக்கு சொந்தமாக கரூர் அருகே கட்டப்பட்டு வந்த ஒரு வீட்டின் புகைப்படம் தான், அதே போன்று தற்பொழுது மரித்தாஸ் வெளியிட்டுள்ள இந்த வீட்டின் புகைப்படம் தான் அமைச்சர் மூர்த்தி பக்கம் அமலாக்க துறை திரும்ப காரணமாக இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here