திமுகவில் கனிமொழிக்கும் – உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையிலான உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டி வருகிறது என்கின்ற தகவல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கனிமொழிக்கு ஆதரவாக டெல்லி பாஜக தலைமை இருந்து வருவது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே டெல்லியில் இருக்கும் மூத்த பத்திரிகையாளர் பலரும் பாஜகவின் மூத்த தலைவர்களான அமைச்சர் நிதின் கட்காரி,
அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றவர் திமுக எம்பி கனிமொழி என்கின்ற தகவலை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் கனிமொழி ஏற்கனவே தனக்கென டெல்லியில், பாஜக – காங்கிரஸ் மற்உட்பட பல கட்சிகளின் ஆதரவோடு டெல்லியில் தனக்கான மிகப்பெரிய லாபியை கட்டமைத்து வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தனக்கு இனி டெல்லி அரசியல் தேவையில்லை மாநில அரசியலில் களமிறங்கி மாநிலத்தில் அதிகாரமிக்க பதவியில் வலம் வர வேண்டும் என்கின்ற முடிவில் தற்போது மாநில அரசியலில் களம் இறங்கி வேலை செய்ய தொடங்கி விட்டார் கனிமொழி. மேலும் தனக்கான ஆதரவாளர்களை அவர்கள் விருப்பப்படும் தொகுதிகளை தேர்வு செய்து வேலை செய்யுங்கள் உங்களுக்கு சீட் வாங்கி தருவது என்னுடைய பொறுப்பு என்றும் கனிமொழி உறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கனிமொழியின் ஆதரவாளர்கள் அக்கா கனிமொழி தமக்கு சீட்டு வாங்கி கொடுத்து விடுவார் என தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பாஜக அரசு சார்பில் சிந்தூர் ஆபரேஷன் குறித்து உலக நாடுகளிடம் விவரிக்க ஏழு குழுக்களை நியமித்தது மத்திய பாஜக அரசு.
அதில் ஒரு குழுவிற்கு கனிமொழி தலைமை தாங்க இருப்பதாக மத்திய பாஜக அரசு அறிவித்திருபதின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது சிந்து ஆபரேஷன் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க பாஜக குழு நியமிக்க முடிவு செய்த போது. திமுக தரப்பிலிருந்து திமுக எம் பி டி ஆர் பாலுவை நியமிக்க மத்திய பாஜக அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது திமுக.
ஆனால் மத்திய பாஜக அரசு திமுக பரிந்துரை செய்த டி ஆர் பாலுவை நியமிக்காமல் கனிமொழியை நியமித்து பல்வேறு குழப்பங்களை திமுகவிற்குள் ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே கனிமொழி பாஜகவை கொள்கை ரீதியாக தொடர்ந்து எதிர்த்து வந்தாலும், மூத்த பாஜக அமைச்சர்களான நிதின் கட்கரி உட்பட பலருடன் நட்புடன் இருந்து வருவது டெல்லி வட்டாரங்கள் ஏற்கனவே பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் தற்பொழுது மாநில அரசியலில் உதயநிதிக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள கனிமொழிக்கு என்ன உதவி வேண்டுமானாலும் பாஜக பின் நின்று செய்யும் என்று ஊக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் கனிமொழி மாநில அரசியலில் இறங்கும் பட்சத்தில் அவருக்கு பாஜக தரப்பிலிருந்து மட்டுமல்ல காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் அனைவரிடம் தரப்பிலிருந்து கனிமொழிக்கு முழு ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது.
அந்த அளவுக்கு கனிமொழி இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவோடு மிகப்பெரிய லாபியை கட்டமைத்து விட்டார். மாநில அரசியலில் தற்பொழுது அவருக்கான லாவியை கட்டமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார் கனிமொழி, இது எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழி உருவெடுத்து ஸ்டாலினுக்கு பின்பு திமுகவை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.