2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, தற்பொழுது கூட்டணி குறித்த பரபரப்பு நீடித்து கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக – பாஜக – அதிமுக – நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வந்த நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என முடிவு செய்த அமித்ஷா.
தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்தார். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த அணைத்து கட்சிகளுமே தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இருக்க வேண்டும் , மேலும் கூடுதலாக நடிகர் விஜய் மற்றும் சீமான் இருவரும் கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என்றும், அதற்கான முயற்சியில் பாஜக தரப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் சீமான் வழக்கம் போல் தனித்து போட்டியிடும் முடிவில் இருக்கிறார், ஆனால் நடிகர் விஜய் உடன் அதிமுக – பாஜக இரண்டு தரப்பும் மாறி மாறி நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எதுவும் எட்டப்பட வில்லை என்றும், விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலை படுத்தி, வரும் 2026 தேர்தலில் தன்னுடைய தலமையில் புதிய கூட்டணி அமைத்து, அந்த கூட்டணியில் இடம் பெரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற முழக்கத்துடன் கூட்டணிக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் விஜய் உடன் யாரும் கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள், அதனால் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் நாங்கள் அவரை கூட்டணிக்கு அழைத்து வருகிறோம், என எடப்பாடி தரப்பு டெல்லி பாஜகவிடம் நம்பிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் திமுக – பாஜக இரண்டு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என நடிகர் விஜய் தரப்பு திட்டவட்டமாக மேடையில் பேசி வருகிறது.
இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் TTV , OPS ஆகியோர் இடம் பெற்றால் தான் அந்த கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்க முடியும், ஒருங்கிணைந்த அதிமுகவால் தான் திமுகவை பலமாக எதிர்க்க முடியும், அதனால் இந்த கூட்டணியில் TTV மற்றும் OPS இருவரையும் உள்ளே கொண்டு வர வேண்டும் என்கிற கட்டுபாடு உடன் தான் அதிமுக – பாஜக கூட்டணியை அமித்ஷா உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிற பாஜகவின், கோரிக்கையை ஏற்று, மேலும் தற்போதைய அரசியல் சூழல் அறிந்து, கூட்டணியில் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய தயாராகவே இருக்கிறார் TTV தினகரன், வெளிப்படையாகவே நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம், அந்த கூட்டணியை அம்மா கட்சி தான் தலைமை தாங்கி வழிநடத்தும் என்றெல்லாம் இறங்கி வந்து பேசியுள்ளார் TTV தினகரன்.
ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் TTV தினகரன் உள்ளே வருவது பற்றி இதுவரை எடப்பாடி பழனிச்சாமி வாயே திறக்கவில்லை, குறிப்பாக தற்பொழுது தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஒரு இடத்தில் கூட TTV தினகரன் பற்றி வாயே திறக்கவில்லை, அந்த வகையில் இன்னும் தன்னுடைய ஈகோவை விட்டு கொடுக்காமல் எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடைசி வரை எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடித்தால், நடிகர் விஜய் உடன் TTV தினகரன் கூட்டணி அமைக்க, விஜய் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.