சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனங்களை குறிவைத்து நடந்த அமலாக்கத்துறை சோதனையில், டாஸ்மாக் குடோனில் இருந்து வெளியான பாட்டில்களுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களை ஒப்பிடும் பொழுது மிக பெரிய மோசடி நடந்துள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் ஊழல் என்பது புதிது கிடையாது, அதுவும் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு வருடமாக தொடரந்து மிக பெரிய அளவில் டாஸ்மாக் மூலம் ஊழல் நடந்து வருவதாக அமலாக்க துறையினருக்கு தெரிந்தும், தற்பொழுது ஏன் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதற்கு, முக்கிய காரணம், இன்னும் சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கிறது.

இரண்டாவது திமுகவின் முதன்மை குடும்பத்தை குறிவைத்து தான் இந்த டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கும் நிலையில், அதற்குள் திமுகவின் தேர்தல் நிதியை லாக் செய்ய வேண்டும், அதே நேரத்தில் டாஸ்மாக் மூலம் வரும் ஊழல் பணத்தை எதாவது ஒரு தொழில்கள் மூலமே பணம் பதுக்கப்பட்டிருக்கும் என்பதை நன்கு அறிந்த அமலாக்க துறை.
அடுத்ததாக சம்பந்தபட்ட தொழில் அதிபர்களை லாக் செய்து, அவர்கள் மூலம் வரும் தேர்தல் செலவுக்காக திமுகவுக்கு நிதி செல்லாமல் தடுக்கும் வேளையில் இறங்கியுள்ளது அமலாக்கத்துறை. இதில் டாஸ்மாக் மூலம் வந்த ஊழல் பணத்தின் ஒரு பகுதி சினிமா தயாரிப்பு மூலம் பதுக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக முதன்மை குடும்பத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து அவர்கள் எடுக்கும் படம் மிக பெரிய அளவில் தோல்வியை தழுவினாலும்,
அந்த படத்தின் மூலம் பல கோடி லாபம் வந்தது போன்று, டாஸ்மாக் மூலம் வந்த ஊழல் பணத்தை உள்ளே வர வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் தலைமை குடும்பத்துக்கு சொந்தமான அந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு விநியோகம் செய்த திரைப்படம் மற்றும் தயாரித்த படங்கள் அனைத்தையும் தோண்டி எடுக்க இருக்கிறது அமலாக்கத்துறை என கூறப்படுகிறது.
அப்படி முதன்மை குடும்பத்துக்கு சொந்தமான சினிமா தயாரிப்பு நிறுவனம் சிக்கினால், துணை முதல் அமைச்சர் உதயநிதி சிக்குவார் என கூறப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது டாஸ்மாக் நிறுவனத்தை குறி வைத்து நடந்த அமலாக்க துறை சோதனை என்பது திமுகவின் முதன்மை குடும்பத்தை குறிவைத்து தான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் கடந்த முறை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை வருடம் சிறையில் அடைக்கப்பட்டு போராடி ஜாமின் பெற்று வெளியில் வந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜி முதன்மை குடும்பத்தை பற்றி வாய் திறந்து இருந்தால், செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு பெரிய சிக்கல் கிடையாது, அந்த வகையில் முதன்மை குடும்பத்தை காப்பாற்றும் வகையில் செந்தில் பாலாஜி தொடர்ந்து செயல்பட்டால்.
அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் சூழல் உருவாகும், அந்த வகையில் ஏற்கனவே சிறைவசம் அனுபவித்த செந்தில் பாலாஜிக்கு பழைய நினைவுகள் கண் முன்னே வந்து செல்லும், அதுவும் இந்த முறை புழல் சிறை இல்லை, திகார் சிறை என்பதால் நிச்சயம் தான் தப்பிக்க செந்தில் பாலாஜி அப்ரூவல் ஆகுவர், முதன்மை குடும்பத்தை போட்டு கொடுப்பர், காரணம் செந்தில்பாலாஜி ஏற்கனவே 5 கட்சி தாவி வந்தவர் தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.