அமைச்சர் துரைமுருகன் வகித்து வந்த கனிமவளத்துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதன் பின்னணியில் துரைமுருகனை திமுகவிலிருந்து ஓரங்கட்ட முதல் குடும்பம் முடிவு செய்துள்ளது என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாகவே திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், பொன்முடி, கே என் நேரு, ஐ பெரியசாமி ஆகியோரை திமுக தலைமை ஓரங்கட்ட தொடங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.
அதாவது மூத்த தலைவர்களுக்கும் திமுக தலைமைக்கும் இடையிலான தொடர்பே துண்டிக்கப்பட்டு விட்டது என்கிறது அரசியல் வட்டாரங்கள், காரணம் இதற்கு முன்பு கருணாநிதி திமுக தலைவராக இருந்த போது எப்போதுமே மூத்த திமுக தலைவர்கள் குறைந்தது நாலு பேருடன் தான் வெளியில் உலா வருவார், மேலும் மூத்த தலைவர்களுடன் தினமும் மனம் விட்டு பேசக்கூடியவர் கருணாநிதி.

ஆனால் தற்பொழுது திமுக தலைவராக இருக்கும் மு க ஸ்டாலினுக்கும் மூத்த தலைவர்களுக்கும் இடையிலான தொடர்பு மிகப்பெரிய அளவில் துண்டிக்கப்பட்டு விட்டது.மேலும் மூத்த தலைவர்களுக்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கும் இடையிலான கருத்து பரிமாற்றமே இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 80 வயது கடந்த திமுகவின் பழுத்த அரசியல்வாதியான மூத்த தலைவர் துரைமுருகன் மீது ஏற்கனவே 2019 நாடாளுமன்ற தேர்தலில் நடந்த சோதனையில் பணம் சிக்கிய வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும் மணல் கொள்ளை தொடர்பான குற்றச்சாட்டு பூதாரமாக வெடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கனிமவளக்கொள்ளை இப்படி அடுத்தடுத்து பல சிக்கலில் சிக்கியுள்ள துரைமுருகன், தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜகவுடன் தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்கின்ற எனக் கூறப்படுகிறது.
அதாவது துரைமுருகன் மட்டுமல்ல திமுகவில் பல மூத்த தலைவர்கள் கே என் நேரு உட்பட பலரும் தங்களை காப்பாற்றி காப்பாற்றிக் கொள்ள பாஜகவுடன் திரை மறைவு தொடர்பில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இப்படி பாஜகவுடன் திரை மறைவில் மூத்த தலைவர்கள் தொடர்பில் இருப்பது முதல் குடும்பத்திற்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால் தான் மூத்த தலைவர்களை முதல் குடும்பம் ஓரங்கட்ட தொடங்கியுள்ளது என்றும், அதன் ஒரு வெளிப்பாடுதான் துரைமுருகன் கையில் இருந்த கனிமவளத்துறையை பிடுங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தற்பொழுது திமுகவில் பாரம்பரியமாக இருந்து வரும் துரைமுருகன், பொன்முடி, ஐ பெரியசாமி, கே என் நேரு போன்றவர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு, அதிமுகவிலிருந்து வந்த செந்தில் பாலாஜி தற்பொழுது கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரகுபதி ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த வருவது மூத்த தலைவர்களை கோபமடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் துரைமுருகனை அரசியலில் ஓரங்கட்ட திமுக தலைமை முடிவு செய்துள்ள நிலையில், மேலும் அடுத்து தன்னுடைய வாரிசான கதிர் ஆனந்தத்தையும் திமுக வில் முன்னிலைப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார் துரைமுருகன். வேலூரில் திமுகவைச் சேர்ந்த குடியாத்தம் குமரனுக்கு இருக்கும் மரியாதை கூட தன்னுடைய மகன் கதிர் ஆனந்துக்கு இல்லை என்பது துரைமுருகனுக்கு மிகப்பெரிய வருத்தமா இருக்கிறது.
இந்நிலையில் தற்பொழுது தன்னை காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடும் சரண்டர் ஆகி திரை மறைவில் தொடர்பு வைத்துள்ள துரைமுருகன், தன்னை முற்றிலும் திமுகவிலிருந்து முதல் குடும்பம் ஓரம் கட்ட நினைத்தால், முதல் குடும்பத்தின் மொத்த ரகசியத்தையும் பாஜகவிடம் போட்டு கொடுத்து விடுவார் என்கின்ற அச்சமும் முதல் குடும்பத்திற்கு இருப்பதால், முதல் குடும்பம் கடும் பீ தியில் இருப்பதாக கூறப்படுகிறது.