மன்னிப்பு கேட்டும் விடாத நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன்… சிக்கலில் மாவட்ட ஆட்சியர்… திமுக ஆட்சிக்கு ஆப்பு வைத்த திருப்பரங்குன்றம் விவகாரம்…

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிக்கோரி மனுவை உயர்நீதிமன்றம் மதுரை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பலகட்டங்களாக விசாரித்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் ஆளும் திமுக அரசு அதை செயல்படுத்தவில்லை.

இதனை தொடர்ந்து தீபம் ஏற்ற மறுத்து, காவல்துறையினரை குவித்து, மாவட்ட ஆட்சியர் மூலம் திடீரென 144 தடை போடப்பட்டு, டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படவில்லை. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தவில்லை அதனால், நிறைவேற்றத் தவறிய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான அனைத்து மனுக்களும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.ம் ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களது தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை. சூழலைக் கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவறு என்றால், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது.

மற்ற அதிகாரிகள் தரப்பிலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த வாதத்தில், நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் கூறுகையில், ”திருப்பரங்குன்றம் மலை மேல் யாரையும் அனுமதிக்க முடியாது. அதனால் வரும் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று காவல் துறை தரப்பில் பேசியதாக கூறப்படுகிறதே? அப்படி சொன்னது யார்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசுத் தரப்பில், எந்த அலுவலரும் அது போன்ற வார்த்தைகளை சொல்லத் துணியமாட்டார். ஒருவேளை, அவ்வாறு கூறியிருந்தால், வெளிப்படையாக மன்னிப்பு கோரட்டும். ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகின்றனர். அதை ஏற்று அவமதிப்பு வழக்கை முடித்துவைக்க வேண்டும். நீதிபதி கோரும் அனைத்து பதில் மனுக்கள், பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் , மற்றவர்களைக்கூட மன்னிக்கலாம். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆட்சியர் எப்படி 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்? அவ்வளவு தைரியமா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார் நீதிபதி ஜி ஆர் சாமிநாதன்.

இதனை தொடர்ந்து அரசுத் தரப்பில், 10 ஆண்டு உழைத்து ஆட்சியராக வந்திருக்கும் இளைஞரின் வாழ்வை கருத்தில் கொள்ள வேண்டும். தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் எதையும் செய்யவில்லை. எனவே, ஆட்சியர் தரப்பில் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆட்சியர் மீதான அவமதிப்பு வழக்கை தனியாகவும், மற்ற அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கை தனியாகவும் பிரித்து நீதிபதி உத்தரவிட்டார். ‘மேலும் ‘அடுத்த விசாரணைக்கு ஆட்சியர் மட்டும் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டு இருக்கிறார் நீதிபதி ஜி ஆர் சாமிநாதன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டாலும் விடுவதாக ஜி ஆர் சாமிநாதன் இல்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.