பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, அவருடைய பதவி காலம் முடிந்ததும், மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் போட்டியின்றி பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார். நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக தேர்தெடுக்கப்பட்டதை அதிகாரப்பூரவமாக அறிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவராக இதுவரை பணியாற்றிய அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக பொறுப்பேற்று கொண்ட அதே மேடையில் அண்ணாமலை தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் என மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கு அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்தது இந்த தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி தானா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இப்படி பரபரப்புக்கு மத்தியில் திடீரென அண்ணாமலை இமயமலை சென்று வந்துள்ள நிலையில், அவருக்கு தேசிய இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட இருக்கிறது என்கிற ஒரு தகவல் காட்டு தீ போன்று பரவியது. அண்ணாமலைக்கு இந்தி, ஆங்கிலம், மற்றும் தென் இந்திய மொழிகள் நன்றாக தெரியும், மேலும் தமிழக பாஜக தலைவராக இருந்த போதே பல மாநிலங்களுக்கு அரசியல் ரீதியான சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
குறிப்பாக தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கொண்டாட பட்ட ஒருவராக இருந்து வருகிறார். அந்த வகையில் பாஜக தேசிய இளைஞரணி தலைவர் பதவி அவருக்கு கொடுக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது. இந்நிலையில் டெல்லியில் திடீரென ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பிண்ணனி தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை மாற்றம் குறித்து பிரதமர் மோடி ஜனதிபதியை சந்தித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பாஜக தலைவரான ஜேபி நட்டாவின் வீட்டில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர், இந்த ஆலோசனையில் அடுத்த பாஜக தேசிய தலைவர் யார் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்பொழுது அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சருக்கு தேசிய பாஜக தேசிய தலைவர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி தேசிய தலைவராக இருக்கும் அவருடைய காலியாக இருக்கும் அமைச்சர் பதவியை நிரப்பும் வகையில், நடைபெறும் அமைச்சரவை மாற்றத்தில், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட டெல்லி பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது.
அமைச்சரவை மாற்றம் வரும் 23ம் தேதிக்குள் நடைபெற இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருவதாகவும், அதனால் தான், பிரதமர் நரேந்திர மோடியின் வரும் 19-ந் தேதி காஷ்மீர் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் அண்ணாமலை தேசிய இளைஞரணி தலைவராக நியமிப்பது குறித்தும் டெல்லி பாஜக தலைமை ஆலோசனை நடத்தியதை உறுதி செய்யும் டெல்லி வட்டாரங்கள்.
ஆனால் அண்ணாமலை ராஜசபா உறுப்பினராகி மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது என்றும், அதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் தடபுடலாக நடந்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது.