கோடை வெயிலின் சூட்டை தணிக்கும் இயற்கை வழிமுறைகள்…

0
Follow on Google News

கோடையில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் நம் இந்த நேரத்தில் தான் சரியான உணவு முறையை கடைபிடிக்க வேண்டும். நம் உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது நம் உடலைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் வெப்பம். கோடைக்காலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தான், கோடைகாலத்தில் அடிக்கடி உடல் சூடு பிடிக்கிறது.

கோடை காலங்களில் உடலின் வெப்பம் அதிகரிப்பதால், எப்போதும் நெருப்பில் உள்ளது போன்ற உணர்வதோடு, வயிற்று வலி, உடல் சோர்வு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் என்று பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கோடை வெப்பத்தால் ஏற்படும் இந்த உடல் சூட்டைக் குறைக்க இயற்கை வைத்தியங்கள் உள்ளன.

இவற்றை தினமும் பின்பற்றினால் கோடைக்காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பித்து விடலாம். கோடை வெப்பத்தை சமாளிக்க தினமும் நீர் மோர், இளநீர், கரும்பு ஜுஸ், சந்தனம் மற்றும் வைட்டமின் சி உணவுகள் முறைகளை கடைப்பிடிக்கலாம். இதை தினம்தோறும் கடைபிடித்து வந்தால் கோடை வெயிலின் உடல் சூட்டை எளிதாக சமாளிக்கலாம்