திரிபுரா பாஜக முதல்வர் தீடிர் ராஜினாமா.. மாநில அரசியலில் வெடித்தது பூகம்பம்.. என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

அகர்தலா : திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் டெப் நேற்றுமுன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜ் பவனில் கவர்னரை நேற்றுமுன்தினம் நண்பகல் சந்தித்த பிப்லப் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். முதல்வரின் இந்த திடீர் ராஜினாமா மாநில அரசியலில் பூகம்பத்தை கிளப்பியது. ஏற்கனவே கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா திடீரென பதவி விலகி அதையடுத்து பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டார்.

திரிபுராவில் அடுத்த முதலமைச்சராக பல பெயர்கள் யூகிக்கப்பட்ட நிலையில் பிஜேபி தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான டாக்டர் மாணிக் சாகா நேற்று முதல்வராக பதவியேற்றார். ராஜ்பவனில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யா மாணிக் சாகாவுக்கு ரகசியக்காப்பு பிரமாணம் செய்துவைத்தார். அவருடன் வேறு எந்த அமைச்சரும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 25 வருடங்களாக கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த திரிபுராவை பிஜேபியின் கோட்டையாக மாற்றிக்காட்டியவர் முன்னாள் முதல்வர் பிப்லப். 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் பிஜேபி அமோக வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் பிப்லப். இந்நிலையில் 2023 ல் நடையோரா இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பிஜேபி ஆட்சியமைக்க கட்சியமைப்பை வலுப்படுத்த தான் ராஜினாமா செய்திருப்பதாக செய்தியாளர்களிடம் பிப்லப் தெரிவித்துள்ளார்.

தற்போது பதவியேற்றிருக்கும் சாகா ஒரு பிரபலமான பல்மருத்துவரும் கூட. 2015ல் பிஜேபியில் தன்னை இணைத்துக்கொண்ட சாகா 2020ல் கட்சியின் முக்கிய தலைவரானார். திரிபுராவின் முதல் பிஜேபி ராஜ்ய சபா எம்பி என்ற பெருமையையும் பெற்றார். கட்சியில் சேர்ந்த ஆரம்ப காலகட்டங்களில் நகர்ப்புற பொறுப்பாளராகவும் 2018 சட்டமன்ற தேர்தலில் பூத் நிர்வாக குழு பொறுப்பாளராகவும் இருந்தார்.

மேலும் பொதுமக்களிடத்தில் நன்மதிப்பை பெற்றுள்ள சாகா கடந்த சட்டமன்றத்தேர்தலில் முன்னாள் முதலமைச்சருடன் இணைந்து கட்சியின் வெற்றிக்காக அயராது உழைத்தார் என கட்சி நிர்வாகிகளே சாகா பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.