மோடியை பஞ்சாபில் போட்டு தள்ள ஏற்கனவே நடந்த ஒத்திகை..! வெளியானது அதிர்ச்சியளிக்கும் எஸ்பிஜி ரிப்போர்ட்..!

0
Follow on Google News

பிரதமர் மோடி கடந்த புதன் கிழமை பஞ்சாப் மாநிலம் சென்று அங்கே ஏற்பட்ட கடும் அச்சுறுத்தல் காரணமாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் அதிர்ஷ்டவசமாக டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி. இந்த விவகாரம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், பிரதமருக்கு உயர் பாதுகாப்பு அளித்துவரும் எஸ்பிஜி, பஞ்சப் டிஜிபிக்கு அனுப்பிய முக்கிய அறிக்கையில் இரண்டு பக்கங்கள் வெளியாகியுள்ளது.

அதில், பிரதமருக்கு எத்தகைய அச்சுறுத்தல்கள் உள்ளன என்பது அதில் விளக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. பாகிஸ்தானில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகளில் உள்ள குறிப்பிட்ட இவர்கள், பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் பயங்கரவாதத்தை கட்டமைக்க முயற்சி செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் முக்கியஸ்தர்களை குறிவைத்து வெடி பொருட்களை கடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி பங்குபெறும் நிகழ்ச்சி நடக்கும் இடம் இந்திய- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து 14 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மேலும் நிகழ்ச்சி நடத்தப்படும் பகுதி ஆயுதம், வெடிபொருள்கள், போதைப் பொருள் கடத்தலுக்கு பெயர்பெற்ற பகுதியாகும். சட்லஜ் நதியின் வழியாகவும், ட்ரான் மூலமாகவும் இந்தப் பகுதியில் கடத்தல்கள் நடந்து வருகின்றன.

பாகிஸ்தானில் இயங்கி வரும் சர்வதேச சீக்கிய இளைஞர் அமைப்பின் தலைவன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் இந்தப் பகுதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் இந்தியப் பகுதியில் அதிநவீன டிபன் பாக்ஸ் வெடி பொருட்களை கடத்தபட்டு வருகிறது என பஞ்சாப் டிஜிபிக்கு அனுப்பிய எஸ்பிஜி ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் அதிர்ச்சிகரமான மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவெனில் மேம்பாலத்தில் பிரதமர் மோடி சிக்குவது போலவும், அவரை பஞ்சாப் விவசாயிகள் சூழ்ந்து தாக்குவது போன்ற, ஒரு கேமிங் வீடியோ 2020 டிசம்பர் 1ஆம் தேதி வெளிவந்திருக்கிறது. கடந்த ஐந்தாம் தேதி பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு என்ன நடந்ததோ, அதை ஓராண்டுக்கு முன்பே ஒத்திகை பார்த்தது போன்று இருக்கும் அந்த வீடியோவில், அதில் காணப்பட்ட காட்சிகள் போன்றவை கடந்த புதன்கிழமை ஒவ்வொன்றும் அரங்கேறியிருக்கிறது.

இந்த கேமிங் வீடியோ புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்பதால் இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என பிரபல அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில்.மேலும் பஞ்சாபில் காங்கிரஸ் போட்ட திட்டம் என்னவாக இருந்திருக்கும் என்பதையும் அவருடைய பார்வையில் தெரிவித்துள்ளார், அதில் மேம்பாலத்தை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பின்பு.

பிரதமர் மோடியை நோக்கி அவர்கள் படையெடுக்க. அதை பிரதமரை பாதுகாக்கும் எஸ்பிஜி படையினர் எதிர்க்க. பின் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமாக வெடித்து பிரதமரை காக்க வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்படும். அதில் சில போராட்டக்காரர்கள் பலியாவார்கள், அதை வைத்து 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை ஓட்டலாம் என்பதுதான் காங்கிரசின் திட்டம் இருந்திருக்கும். ஆனால் போட்ட திட்டம் தோல்வி அடைந்தது, தற்போது ஒவ்வொரு விஷயமாக அம்பலமாகி வருகிறது, வேறு வழியின்றி குளறுபடியை சோனியாவே கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஜோதிமணியை சீரியசாக எடுத்துக்க வேண்டாம்.. சிரிச்சுட்டு கடந்து போங்க..