சந்தேகமே வேண்டாம் உத்திரபிரதேச தேர்தலில் இவர் தான் வெற்றி பெற போகிறார்.! 85% வெற்றி வாய்ப்பு இந்த கட்சிக்கு தான்…

0

இந்தியாவின் ஆட்சியினை நிர்மானிக்கும் மாநிலம் உத்திரபிரதேசம், அங்கு ஆதிக்கம் செலுத்தும் கட்சிதான் தேசிய அரசியலும் ஆதிக்கம் செலுத்தும் அதன் மிகபெரிய பரப்பளவு, 402 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மக்கள் நெருக்கம் என அதற்கு ஏக காரணங்கள், அது கொடுக்கும் முடிவுதான் இந்தியாவின் அரசியலை முடிவு செய்யும் அது வினோதமான சென்டிமென்டும் கூட இன்றுவரை அதுதான் தொடர்கின்றது

அந்த அதி முக்கிய மாநிலத்தில் தேர்தல் தேதி அடுத்தமாதம் என அறிவிக்கபட்டதும் காட்சிகள் களைகட்டுகின்றன‌. காங்கிரஸ் களத்தில் இருப்பதாக சொன்னாலும் அதற்கு எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை , இந்நிலையில் சரத்பாவரின் கட்சி சமாஜ்வாடியுடன் கூட்டணி வைத்திருக்கின்றது அக்கட்சிக்கு மராட்டியம் தாண்டி ஆதரவு இல்லை எனினும் இது அடுத்த பார்லிமென்ட் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதபடுகின்றது

மாயவதி மக்களிடம் மதிப்பினை இழந்துவிட்ட நிலையில் தேர்தலில் அகிலேஷ் யாதவுக்கும் ஆளும் யோகிக்குமான மோதலாகவே இது கருதபடுகின்றது. இதில் ஒரு விஷயம் கவனிக்கபடவேண்டும், கடந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என சொல்லாமலே அசுரவெற்றிபெற்ற கட்சி பாஜக, இப்பொழுது யோகி என்பவர் முதல்வராக ஆட்சி செய்தாலும் அடுத்த முதல்வர் அவர்தான் என பாஜக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது

அதாவது முன்பு பாஜக எனும் சித்தாந்தம் வென்றது அதனை யோகி எனும் முதல்வர் வலுபடுத்தினார், இப்பொழுது பல்வேறு விஷயங்களால் பாஜக எனும் கட்சி பலமாக காலூன்றியிருக்கின்றது. இது, யோகி அவர்களுக்கு கூடுதல் பலம். ஆனால் சமாஜ்வாடிக்கு அகிலேஷ் என்பவரின் தனிமுகமும் அவர்களின் ஜாதி உள்ளிட்டவைதான் அடையாளம். பாஜக மதம் ஜாதிகளை கடந்து ஒரு மிகபெரிய சித்தாந்த கட்சியாக உருவெடுத்த வேளை பாஜகவின் எதிர்ப்பு வோட்டுகள் மிக குறைவே,

உபியில் பெருவாரி இஸ்லாமியர்களே பாஜகவினை ஆதரிக்கின்றனர் என்பதால், களத்தில் பாஜகதான் முந்துகின்றது. உபி தேர்தலை உலகமே உற்றுகவனிப்பது நிஜம் அதில் பாஜவுக்கு 85% வெற்றிவாய்ப்பு இருப்பதும் நிஜம் என பிரபல அரசியல் வல்லுநர் ஸ்டான்லி ராஜன் உத்திரபிரதேச தேர்தல் குறித்து தெரிவித்துள்ளார்.