ஹேக் செய்யப்பட்ட ஸ்பைஸ் ஜெட் தளம்… பயணிகள் பதட்டம்.. விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு..!

0
Follow on Google News

இந்தியா : இந்தியாவில் சமீபகாலமாக சைபர் அட்டாக் பெருகிவருவதாக ஆய்வறிக்கைகள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. மேலும் கடந்த சில மாதங்களில் பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பலரது ட்விட்டரை சில மர்மநபர்கள் ஹேக் செய்திருந்தனர்.

சமீபத்தில் NDRF சமூகவலைத்தள கணக்கும் ஹேக் செய்யப்பட்டு சிறிது நேரத்தில் மீட்கப்பட்டது. பால்கோட் தாக்குதலில் சைபர் அட்டாக் முக்கிய பங்கு வகித்ததாக அப்போதைய செய்திதாள்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு பிரபல விமான நிறுவனத்தின் வெப்சைட்டை பெங்களுர் பயணி ஒருவர் ஹேக் செய்து சில தகவல்களை பதிவிறக்கம் செய்திருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் பல விமான நிலையங்களில் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் மட்டும் நேற்று காலை கிளம்ப மிக தாமதமானது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பதட்டத்திற்கு ஆளானார்கள். அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் நேற்றுமுன்தினம் இரவு ஸ்பைஸ் ஜெட் தளத்தை யாரோ ஹேக் செய்திருப்பது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் செய்தியாளர்களிடம் ” சில ஸ்பைஸ் ஜெட் அமைப்புகள் மீதுசில ரேன்சம்வேர் தாக்குதல் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடத்தப்பட்டிருக்கிறது. அதனால் விமானங்கள் கிளம்ப தாமதமானது. எங்கள் நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்ப குழு நிலைமையை சரிசெய்துள்ளது.

தற்போது விமானங்கள் தடையின்றி சாதாரணமாக இயங்குகின்றன” என தெரிவித்தார். இந்த தகவலை ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் விமானநிலையங்களில் பயணிகள் காரணம் தெரியாமல் பதட்டமடைந்தனர். இதனால் ப்ளோர் அசிஸ்டன்ட் எனப்படும் தரை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பயணிகளிடம் ப்ளோர் அசிஸ்டன்ட் சர்வர் செயலிழந்துவிட்டது. அதனால் புறப்பட தாமதமாகும் என கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பயணிகளில் ஒருவரான சவுரவ் கோயல் ” ஸ்பைஸ் ஜெட் விமானசேவை மிகமிக மோசமானது. இதன் வாடிக்கையாளர் சேவை கவலைகொள்ள வைக்கிறது. காலை 6.25க்கு கிளம்பவேண்டிய SG 473 விமானம் இன்னும் விமான நிலையத்திலேயே இருக்கிறது.

சர்வர் டவுன் என்பதெல்லாம் ஸ்பைஸ் ஜெட்டின் கட்டுக்கதை. நிலைமை குறித்த எந்தவொரு தகவலும் ஊழியர்களிடம் இல்லை. பயணிகள் அனைவரும் அவதிப்படுகிறோம்” என தனது ட்விட்டரில் கோயல் தெரிவித்துள்ளார்.