தனக்கு எதிரா வழக்கு போட்ட பெண் வழக்கறிங்கர் மீது தாக்குதல்..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

கர்நாடகா : சொத்து தகராறில் நடுரோட்டில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்டார். பாஜக நிர்வாகி மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த பெண் வழக்கறிஞர் காவல்துறையில் புகாரளித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் நவநகர் வேளாண்பல்கலைக்கழகத்தில் போட்டோகிராபராக பணிபுரிந்துவருபவர் மஹந்தேஷ். இவரது அண்டைவீட்டுக்காரர் வழக்கறிஞர் சங்கீதா. இவர்கள் இருவரது குடும்பத்திற்குள் பலகாலமாக சண்டை நீடித்துவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கீதாவை சொத்துத்தகராறில் மஹந்தேஷ் நடுரோட்டில் தாக்கினார்.

சங்கீதாவின் கணவர் மக்களை அழைத்தும் யாரும் உதவிக்கு செல்லவில்லை. கடுமையாக தாக்கப்பட்ட சங்கீதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு போலீசார் விரைந்தனர். வழக்கறிஞர் சங்கீதாவிடம் விசாரணை நடத்திய போலீசார் மஹந்தேஷை கைதுசெய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கீதா எனது மாமா வீட்டை எனது அனுமதியில்லாமல் வாங்கியுள்ளனர். அதைக்கேட்க சென்ற என்னை தாக்கினார் மஹந்தேஷ்.பாகல்கோட் மாவட்ட பிஜேபி தலைவரான ராஜு நாயக்கரின் தூண்டுதலாலேயே மஹந்த்தேஷ் என்னை தாக்கினார். ராஜூநாயக்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் ராஜூநாயக்கர் கூறுகையில் ” சட்டப்படியே நான் அந்த இடத்தை வாங்கியுள்ளேன். அதற்கான ஆதாரங்களும் ஆவணங்களும் என்னிடம் உள்ளன. அந்த சொத்தில் அவருக்கு நேரடியான பங்கு எதுவும் இல்லை. எனது அரசியல் வளர்ச்சியை பொறுக்கமுடியாத அவர் என்மீது அவதூறு பரப்புகிறார்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அந்த பெண் வழக்கறிஞர் சங்கீதா காங்கிரஸ் ஆதரவாளர் என கருதப்படுகிறது.