2009 முதல் 2011 வரை தமிழக கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருடைய மகள் கனிமொழி அரசியலுக்கு வரவழைக்கபட்டர், சென்னை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, தன்னை ஒரு கவிஞராக முன்னிறுத்தி பொது வழக்கைக்கு அறிமுகம் செய்து கொண்ட கனிமொழி, பின் திமுக ராஜசபை எம்பியாக நியமிக்கப்பட்டு தனது தயார் ராசாத்தி அம்மாள் நாடார் சாதி என்பதை குறிப்பிட்டு தென்மாவட்டத்தில் நாடார் சமூகத்தின் திமுக முகமாக முன்னிறுத்தப்பட்டர் கனிமொழி.
அப்போது அதே நாடார் சமூகத்தை சேர்ந்த முன்னால் அமைச்சர் ஆலடி அருணா மகள் பூங்கோதை நாடார் சமூக மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக வளர்ந்து வந்து கொண்டிருந்தார், அவர் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார், இந்நிலையில் தென் மாவட்டத்தில் கனிமொழி அரசியல் வளச்சிக்காக திட்டமிட்டு பூங்கோதை ஆலடி அருணா தொலைபேசியில் அதிகாரியை மிரட்டிய சம்பவத்தில் சிக்க வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து பூங்கோதையிடம் இருந்த அமைச்சர் பதவி தற்காலிகமாக பிடுங்கப்பட்டது, இதன் பின்பு பூங்கோதை படி படியாக திமுகவில் இருந்து கட்டம் கட்டப்பட்டு தென் மாவட்டத்தில் திமுகவின் முகமாக கனிமொழி முன்னிறுத்தப்பட்டர், இதனை தொடர்ந்து 2019ல் நடந்த தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தூத்துக்குடியில் தேர்தல் பணியை தொடங்கினர்.
நாடார் சமூக மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒருவரான ஹரி நாடாரை தனக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வைத்தார், வெற்றியும் பெற்றார், இதனை தொடர்ந்து 2021 சட்டசபை தேர்தலில் பூங்கோதை ஆலடி அருணாவை முற்றிலுமாக அரசியலில் இருந்து துடைத்து எறிய முடிவு செய்த கனிமொழி, நாடார் வாக்குகள் பூங்கோதைக்கு செல்வதை பிரிக்க ஹரி நாடாரை ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக கனிமொழி களம் இறக்கியதாக கூறபடுகிறது.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் , பூங்கோதை ஆலடி அருணா 70,380 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 73,985 வாக்குகளும் பெற்றனர். 3,605 வாக்குகள் வித்தியாசத்தில் மனோஜ் பாண்டியன் வென்றார்.சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய ஹரி நாடார் 37,632 வாக்குகளைப் பெற்றுள்ளார்.இவர் பெற்ற வாக்குகள் பெரும்பாலும் பூங்கோதைக்கு பதிவாக இருந்த வாக்குகள் என கூறப்படுகிறது, இந்நிலையில் இந்த தேர்தலில் பூங்கோதை ஆலடி அருணாவை அரசியலில் இருந்து முற்றிலும் துடைத்து எறியப்பட்டு இனி தென்மாவட்டதில் நாடார் சமூக மக்கள் மத்தியில் திமுகவின் முகம் என்றால் அது கனிமொழி தான் என்பதை நிலை நிறுத்திவிட்டார் கனிமொழி என்கின்றனர் தென்மாவட்ட முக்கிய அரசியல் புள்ளிகள்.