டி20யில் இந்திய அணிக்கு சாதகமாக பல திலல்லங்காடி வேலை செய்த ICC… அடுக்கடுக்கான குற்றசாட்டுகள்..

0
Follow on Google News

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 ஜூன் 2 அன்று தொடங்கிவிட்டது. இறுதிப் போட்டி ஜூன் 29 அன்று நடைபெறுகிறது. மொத்தம் 55 போட்டிகள் 29 நாட்கள் நடைபெறும். இந்த 9வது டி20 உலக கோப்பையில், இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன.

இம்முறை டி20 போட்டிகள் மீண்டும் பழைய வழிமுறையைப் பின்பற்றி நடக்கிறது. அதன்படி மூன்று சுற்றுகளாக விளையாடப்படுகிறது, குழு நிலை (Group stage), சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் (அரையிறுதி மற்றும் இறுதி) (Knockout) ஆகிய மூன்று சுற்றுகளாக விளையாடப்படுகிறது. இருபது அணிகளும் ஐந்து பேர் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் ரவுண்ட் ராபின் ஃபார்மட்டில் (Round Robin format) ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுவார்கள். நான்கு குழுக்களில் இருந்து இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும். ஏ பிரிவில் பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா இடம்பெற்றுள்ளது. குரூப் B: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து, குரூப் C: ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உகாண்டா, மேற்கிந்திய தீவுகள், குரூப் D: வங்கதேசம் நேபாளம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகியவை உள்ளன.

டி20 உலகக்கோப்பையின் முதல் கட்டமாக, குரூப் ஸ்டேஜ், ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 18ஆம் தேதி வரை நடக்கும். இரண்டாம் கட்டமாக, ‘சூப்பர் 8’ போட்டி ஜூன் 19 முதல் 25 வரை நடைபெறும். அரையிறுதிப் போட்டிகள் 27ஆம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதியும் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் போட்டிகள் வெவ்வேறு நாடுகளில் நடப்பதால், சில போட்டிகள் உள்ளூர் நேரப்படி காலையிலும் சில போட்டிகள் மாலையிலும் நடைபெறும். எனவே அந்தந்த அணிகளின் ரசிகர்கள் போட்டிகளைப் பார்த்து ரசிக்க முடியும்.

இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஊடக உரிமையை ‘டிஸ்னி ஸ்டார்’ (Disney Star) பெற்றுள்ளது, மேலும் பிபிசி இணையதளத்தில் அவ்வப்போது போட்டிகளைப் பற்றிய தகவல்கள் வழங்கப்படும். இந்தியாவின் ‘குரூப் ஸ்டேஜ்’ போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் மூன்று போட்டிகளும், ஃப்ளோரிடாவின் லாடர்ஹில்லில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க் மைதானத்தில் ஒரு போட்டியும் நடக்கிறது.

இப்போட்டிகளில் இந்திய அணி அற இறுதி மற்றும் இறுதி போட்டிக்கு முன்னேறினால் அவை எந்தெந்த மைதானத்தில் விளையாடும் என்றும் ஐசிசி முடிவு செய்துள்ளது. இந்தியாவின் முதல் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கும் மற்ற மூன்று போட்டிகளும் இரவு 8 மணிக்கும் நடைபெறுகிறது. இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் இரண்டாவது போட்டியில் விளையாடும் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு இந்திய அணி அரைஇறுதியில் விளையாடும் நாளுக்கு ரிசர்வ் டே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு அணியின் அரை இறுதிப்போட்டிக்க ரிசர்வ் டே வழங்கப்படவில்லை. அதோட அந்த போட்டியின் நேரம் ஆறு மணி ஆக உள்ளது. ஆனால் இந்திய அணிக்கு அனைத்து போட்டிகளும் 8 மணிக்கு நடைபெறுமாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய அணி நான்கு சுழற் பந்து வீச்சாளர்களுடன் போட்டிக்கு ஆயத்தமாக சென்றுள்ளது.

இந்த நிலையில் மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் அனைத்து மைதானங்களும் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். எனவே இப்படி மறைமுகமாக icc இந்தியா அணிக்கு ஏற்றபடி நேரம் ஆடுகளம் என அனைத்தையும் அமைத்துக் கொடுத்துள்ளதா என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.