வாய்வு தொந்தரவுக்கும், ஜீரண சக்திக்கும் மிளகு பூண்டு சீரக சாதம் செய்வது எப்படி.?

0

அனைவருக்கும் வணக்கம், இன்று நம் ஆரோக்கிய சமையலில் நாம் பார்க்கப்போவது மிளகு பூண்டு சீரக சாதம். இது வாய்வு தொந்தரவுக்கும், ஜீரண சக்திக்கும் ரொம்ப உதவியாக இருக்கும். இந்த மிளகு பூண்டு சீரக சாதம் செய்ய தேவையானவை:-

★மிளகுத்தூள் சிறிதளவு
★சீரகம்-இரண்டு தேக்கரண்டி
★பூண்டு-10 பல்
★நெய் அல்லது எண்ணெய்-2 தேக்கரண்டி
★முந்திரிப்பருப்பு சிறிதளவு
★தேவைக்கு ஏற்ப கருவேப்பிலை
★சின்ன வெங்காயம் சிறிதளவு

செய்முறை:- முதலில் நெய் அல்லது எண்ணையை ஊற்றி சீரகம், முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதன் பிறகு வடித்து வைத்த சாதத்தை எடுத்து அதனுடன் கலந்து மிளகுத் தூளையும் சேர்த்துவிட்டு, தேவைக்கு ஏற்ப நெய் விட்டு நன்றாக பிரட்டி கலக்கவும். இதோ எளிமையான மிளகு பூண்டு சீரக சாதம் தையார் ஆகிவிட்டது.
~சுகன்யாதேவி முத்துராமன்.
இந்த செய்முறையை காணொளியில் பார்க்க வேண்டும் என்றால், இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

error: Content is protected !!