பேரம் பேசிய சன் டிவி……. கொடுத்த வாக்குக்காக மசியாத சுரேஷ் காமாட்சி..! ஆனால் நன்றி கெட்டு போய் சிம்பு குடும்பம் இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

நடிகர் சிலம்பரசன் குழந்தை நட்சதிரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின் ஹீரோவாக அவதாரம் எடுத்த சிம்பு, எழுத்து, இயக்கம், திரைக்கதை, பாடலாசிரியர், நடனம் என நடிகர் கமல்ஹாசன் போன்று சினிமாவில் அணைத்து துறையிலும் திறன்பட செயல்பட்டார். சிலம்பரசன் இயக்கி நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான வல்லவன் படத்தின் வெற்றிக்கு பின் சுமார் மூன்று ஆண்டுகள் தொடர் தோல்வி படங்களை கொடுத்த சிம்பு.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான விண்ணை தாண்டி வருவாயா ஒரு அளவு வெற்றியை கொடுக்க அதன் பின்பு சிம்பு சினிமாவில் இருக்கிறாரா, இல்லையா என்று தேடும் அளவுக்கு தொடர்ந்து பத்து வருடமாக தோல்வி படங்களை மட்டும் கொடுக்க, மேலும் படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வராமல், இனி சிம்புவை வைத்து படம் இயங்குவதில்லை என முடிவுக்கு வந்த சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சிம்புவை புறக்கணிக்க தொடங்கினர்.

இந்நிலையில் சினிமாவில் இருந்து ஓய்வு பெரும் சூழலுக்கு சென்ற சிம்புவை தனது படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இதனை தொடர்ந்து மாநாடு படம் படப்பிடிப்பு தொடங்கிய சில காலங்களில் கொரோனா தொற்று பரவ படப்பிடிப்பு பாதியில் நின்றது, இதன் பின்பு கடும் போராட்டத்துக்கு பின்பு ஒரு வழியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து திரைக்கு வந்து மாநாடு படம் வெற்றியை பெற்று தந்தது.

சுமார் பத்து வருடங்களுக்கு பின் சிம்புக்கு வெற்றி படத்தை கொடுத்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஆனால் பத்து வருடமாக சினிமாவில் காணாமல் பொய் இருந்த சிம்பு ஒரு படம் வெற்றி பெற்றதும் நன்றி மறந்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் மீதே சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரர் வழக்கு பதிவு செய்துள்ளது, தமிழ் சினிமா வட்டாரத்தில் சிம்புக்கு மிக பெரிய அவப்பெயரை பெற்று தந்துள்ளது, மேலும் படத்தின் வெற்றி விழாவுக்கு வராமல் புறக்கணித்துள்ளார் சிம்பு.

சிம்பு மற்றும் அவரின் குடும்பத்தினரின் இந்த செயல்களுக்கு இயக்குனர் SAC போன்ற பலர் தங்கள் எதிப்பை தெரிவித்துள்ள நிலையில், மாநாடு படம் தொலைக்காட்சி உரிமையை ஆரம்ப கட்டத்தில், மிக குறைந்த விலைக்கு பலர் கேட்க, யாருக்கும் விற்க தயாரிப்பாளர் முன் வரவில்லை, இதனை தொடர்ந்து படம் மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி 8 கோடிக்கு கேட்டுள்ளது,இதற்கு சுரேஷ் காமாட்சி சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் விஜய் டிவியுடன் எந்த ஒரு ஒப்பந்தமும் போடவில்லை, வார்த்தையால் மட்டும் 8 கோடிக்கு கொடுப்பதாக சுரேஷ் காமாட்சி வாக்கு கொடுத்துள்ளார். இதன் பின் சன் டிவி தரப்பில் இருந்து 13 கோடிக்கு இந்த படத்தை விஜய் டிவி கேட்ட தொகையை விட கூடுதலாக 5 கோடிக்கு விலைக்கு கேட்டுள்ளார்கள், ஆனால் சுரேஷ் காமாட்சி தான் விஜய் டிவிக்கு வாக்கு கொடுத்துவிட்டேன் அந்த வாக்கை மீற மாட்டேன் என பணம் முக்கியமில்லை வாக்கு தான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது போன்ற அபூர்மான நாணயமான மனிதர்களிடம் சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி மறந்து சுரேஷ் காமாட்சி மீதே வழக்கு பதிவு செய்வது போன்ற செயலில் ஈடுபடுவது, சிம்புவை சினிமா துறையில் அழிவு பாதைக்கு அழைத்து சென்றுவிடும் என எச்சரிக்கின்றனர் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.