நடிகர் ராஜ்கிரண் அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக வேலை செய்து வந்த வடிவேலு, முதல் முதலில் 1991ம் ஆண்டு என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் அறிமுகமானார், இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ராஜ்கிரண் சொந்த தயாரிப்பு என்பதால், ராஜ்கிரண் கேட்டு கொண்டதை தொடர்ந்து இயக்குனர் கஸ்துரிராஜா முயற்சியில் இந்த படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது,
இதனை தொடர்ந்து சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன் என அடுத்தது மூன்று படங்களில் நடித்து திரைக்கு வந்த இரண்டு வருடத்தில் பிசி நடிகரானார் வடிவேலு, அப்போது காமடி நடிகராக உச்சத்தில் இருந்த கவுண்டமணி, செந்தில் இருவரையும் பின்னுக்கு தள்ளி முன்னணி காமடி நடிகராக உயர்ந்தார், இவருடைய சம்பளமும் உயர்ந்தது, இவரின் கால் சீட் கிடைக்காமல் இயக்குனர்கள் தவித்தனர், ஒரு மணி நேர கால்ஷீட்க்கு இவ்வளவு என வடிவேலு சம்பளம் பேசப்பட்டது.
இதன் பின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ஹீரோவாக நடித்தார் வடிவேலு இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோவாக தான் நடிப்பேன் என அடம்பிடித்து காமடி கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்தார், இதன் பின் தம்பி ராமையா இயக்கத்தில் இந்திரா லோகத்தில் நா அழகப்பன் என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.
இந்த படம் படப்பிடிப்பின் போது அப்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படம் மெகா ஹிட் ஆனது, அந்த படத்தில் கதநாயகியாக நடித்த ஸ்ரேயாவை தன்னுடன் ஒரு பாடலுக்கு ஆட வைக்க வேண்டும் என இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் அடம் பிடித்துள்ளார் வடிவேலு, ஆனால் ஸ்ரேயா வடிவேலுவுடன் நடிக்க மறுத்துவிட்டார், ஆனால் வடிவேலு விடுவதாக இல்லை, சம்பளம் அதிகம் பேசியாவது என்னுடன் நீங்க ஆட வைத்தே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடித்துள்ளார் வடிவேலு.
இதனை தொடர்ந்து அதிக சம்பளம் கொடுத்து வடிவேலு ஆசைக்கு இணங்க அவருடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட ஸ்ரேயா அந்த படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலு உடன் கிசு கிசுக்கபட்டார், இதன் பின் உச்சத்தில் இருந்த ஸ்ரேயாவை, முன்னனி ஹீரோக்கள் அனைவரும் வடிவேலு கூட ஆடிய அந்த நடிகையா வேண்டாம் என புறக்கணித்தனர், இதன் பின்பு சில வருடங்களில் தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்ட நடிகை ஸ்ரேயா தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் பின்பு திருமணம் செய்து செட்டிலானார்.
இதே போன்று வடிவேலு ஹீரோவாக நடித்த எலி படத்தில் தனக்கு ஜோடியாக நடிகை சதா வேண்டும் என அடம் பிடிக்க பட குழுவினர் வடிவேலு ஆசைக்கு இணங்க நடிகை சதாவை அந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து வடிவேலு ஆசையை நிறைவேற்றினர்கள், இந்த படத்துக்கு பின் நடிகை சதாவும் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார், இப்படி தனது ஆசைக்கு இணங்க வைத்து தன்னுடன் கதநாயகியாக நடித்த நடிகைகளை சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் செய்து விட்டார் வடிவேலு.