நடிகர் ராஜ்கிரண் அலுவலத்தில் ஆபீஸ் பையனாக வேலைக்கு இருந்த நடிகர் வடிவேலு, என் ராசாவின் மனசிலே படத்தின் நடிகர் ராஜ்கிரண் தயவால் சினிமாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். சினிமாவுக்கு வந்த குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு முன்னனி காமெடி நடிகரானார் வடிவேலு, ஒரு வருட வருமானத்தை கணக்கிட்டால் ஹீரோக்களை விட அதிகம் சம்பள வாங்கும் காமெடி நடிகராக வலம் வந்தார்.
மிக பெரிய உச்சத்தில் இருந்த நடிகர் வடிவேலு 2011 சட்டசபை தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர், அந்த தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதும், சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போனார் வடிவேலு. பலர் வடிவேலு அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் தான் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், ஆனால் வடிவேலு சக நடிகர்கள், தயாரிப்பாளர், இயக்குனர்களிடம் ஆணவத்துடன் நடந்து கொண்டது தான் அவரின் சினிமா வீழ்ச்சிக்கு காரணம் என சினிமா வட்டாரதத்தில் பேசப்படுகிறது.
தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தனக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளை ஒரு வழியாக முடித்துவிட்டு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் வடிவேலு. ஆனால் வடிவேலுவின் ரீ-என்ட்ரி மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்குமா என்பது அவர் நடித்த படங்கள் வெளியான பின்பு தான் முடிவாகும் , ஆனால் சுமார் பல வருடமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததை மறந்து ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு தற்போது உச்சகட்ட ஆணவத்தில் ஆடி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, தான் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் இருந்த காலத்தில், தன்னை பற்றி தவறாக மற்றவர்களிடம் பேசியதாக கடந்த காலத்தில் வடிவேலுக்கு உதவியாளராகவும் மற்றும் அவருடன் துணை நடிகராகநடித்தவர்கள் பெரும்பாலானோரை வேண்டாம், இனிமேல் உங்களுக்கு எனது சினிமாவில் வாய்ப்பு இல்லை என ஆணவத்துடன் தெரிவித்துவிட்டாராம். இயக்குனர் எவ்வளவோ எடுத்து தெரிவித்தும் வடிவேலு தனது முடிவை மாற்றி கொள்ள வில்லையாம்.
இந்நிலையில் தற்போது வடிவேலுவால் விரட்டப்பட்ட துணை நடிகர்கள்,மற்றும் அவரது உதவியாளர்கள், சினிமா துறையில் இருக்கும் முக்கிய நபர்களிடம் வடிவேலு இப்படி செய்தால் எங்க பொழப்பு என்னாவது, நீங்களாவது அவரிடம் பேசி எங்களுக்கு வாய்ப்பை பெற்று கொடுங்க என முறையிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் நடிகர் ராஜ்கிரண் கவனத்துக்கு சென்றதும், இதல்லாம் தப்பு தன்னால் வாழ்ந்தார்கள் என்று தான் பிறர் சொல்ல வேண்டும், இப்படி தன்னை நம்பியவர்கள் வயிற்றில் அடிப்பது வடிவேலுக்கு நல்லது இல்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் வடிவேலுவை எச்சரிக்கும் விதத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.